கஜா புயல் கரையை கடக்கும் நேரம் மாறியது

 

கஜா புயல் கரையை கடக்கும் நேரம் மாறியது

கஜா புயல் இரவு 11.30 மணிக்கு கரையை  கடக்கும் என அறிவித்திருந்த சூழலில் தற்போது அது கரையை கடக்கும் நேரம் மாறியுள்ளது.

சென்னை: கஜா புயல் இரவு 11.30 மணிக்கு கரையை  கடக்கும் என அறிவித்திருந்த சூழலில் தற்போது அது கரையை கடக்கும் நேரம் மாறியுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான கஜா புயல் 13 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆனால் அதன் நகரும் வேகம் இன்று 23 கி.மீ-ஆக உயர்ந்தது. மேலும் இன்று மாலை அல்லது இரவு வாக்கில் கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து 23 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்து கொண்டிருந்த கஜா புயல் 18 கி.மீ வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும், இரவு 11.30 மணிக்கு கடலூர் – பாம்பன் இடையே நாகை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வும் மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி கஜா புயல் மணிக்கு 25 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது எனவும், இரவு 8 – 11 மணிக்குள் கடலூர் – பாம்பன் இடையே நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், புயல் கரையை கடக்கும்போது 80-90 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ளது.