கஜா புயல்; ஆதாரமற்ற செய்திகளை நம்பவேண்டாம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தல்

 

கஜா புயல்; ஆதாரமற்ற செய்திகளை நம்பவேண்டாம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தல்

கஜா புயல் குறித்து ஆதாரமற்ற செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை: கஜா புயல் குறித்து ஆதாரமற்ற செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டுள்ளது. கஜா புயல் நவம்பர் 15-ம் தேதி கடலூர் – பாம்பன் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  கஜா புயலுக்காக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை இயங்கும்.  முன்னெச்சரிக்க நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் மற்றும் மழை தொடர்பான ஆதாரமற்ற செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம். அரசு வெளியிடும் தகவல்களை மட்டும் பொதுமக்கள் நம்ப வேண்டும்.

கஜா புயல் இதுவரை 3 முறை திசை மாறியுள்ளது. அதனை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். கடலோர மாவட்டங்களில் 2,559 இடங்கள் பாதிக்கப்படும் என கண்டறிந்துள்ளோம். அனைத்து தயார் நிலையில் இருக்கின்றன.  பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளி 410 குழுக்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.  மீட்புக்குழுவுடன் இணைந்து பணிபுரிய பேரிடர் மீட்பு உதவிப்படையும் தயாராக இருக்கிறது.

அனைத்து மருத்துவமனைகளிலும் கீழ்தளத்தில் இருக்கும் ஜெனரேட்டர்களை உயர்வான இடத்தில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதிய ஆக்சிஜன் சிலிண்டர்கள், அத்தியாவசிய மருந்துகளை இருப்பு வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.