கஜா புயலின் வெளிப்பகுதி கரையை கடக்க தொடங்கி உள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்

கஜா புயலின் வெளிப்பகுதி கரையை கடக்க தொடங்கி உள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: கஜா புயலின் வெளிப்பகுதி கரையை கடக்க தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: கஜா புயலின் வெளிப்பகுதி கரையை கடக்க தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான கஜா புயலானது நாகையில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கஜா புயல் கரையை கடக்கும்போது 80 கி.மீ முதல் 90 கி.மீ வரை காற்று வீசும்.  சில நேரத்தில் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, மணிக்கு 16.8 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி வந்து கொண்டு இருந்த புயலின் வேகம் 10 கிலோ மீட்டராக குறைந்துள்ளது.

இந்நிலையில், கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.