கஜா புயலின் கோரப்பிடியில் சிக்கிய ஆலமரத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்த கிராம மக்கள்!

 

கஜா புயலின் கோரப்பிடியில் சிக்கிய ஆலமரத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்த  கிராம மக்கள்!

கஜா புயலின்போது வேரோடு வீழ்ந்த  ஆலமரத்தை  கிராம மக்கள் மீண்டும் உயிர்ப்பிக்க செய்துள்ளனர். 

கஜா புயலின் கோரப்பிடியில் சிக்கிய ஆலமரத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்த  கிராம மக்கள்!

வேதாரண்யம்: கஜா புயலின்போது வேரோடு வீழ்ந்த  ஆலமரத்தை  கிராம மக்கள் மீண்டும் உயிர்ப்பிக்க செய்துள்ளனர். 

கடந்த நவம்பர் மாதம்  திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. இதனால் பெரும்பாலான பகுதிகள் அதிக அளவில் சேதத்தை சந்தித்தது. இதனால் பழமையான மரங்களும், வீடுகளும் சேதமடைந்தன. குறிப்பாக உயிர்பலிகள் ஏற்பட்டது. கஜ புயலின் ருத்ரதாண்டவத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டது. 

இந்நிலையில் கஜா புயலின் கோரப்பிடியில் வேதாரண்யம் அருகே உள்ள மறையநல்லூரில்  இருந்த இருநூறு ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்தது. இந்த ஆலமரம் அப்பகுதியின் அடையாளமாகவே பார்க்கப்பட்டது. இதனால் அம்மரத்தை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்று அந்த கிராம மக்கள் விரும்பினர். 

அந்த வகையில், ஆலமரத்தை மீட்டெடுக்க கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் இரண்டு கிரேன்கள், ஒரு பொக்லைன் மூலம் ஆலமரத்தை நிமிர்த்தி , மண்ணில் நட்டு வைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 12 மணிநேர உழைப்பிற்கு பிறகு, ஆலமரத்தை மீண்டும் உயிர்ப்பித்துள்ளனர். இந்த பணிக்காக இதுவரை 50ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.