கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டி தரப்படும்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

 

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டி தரப்படும்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்

தஞ்சாவூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளும் சேதம் அடைந்து இருக்கின்றன. பயிர்கள், தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தும், கால்நடைகள் அழிந்தும் விவசாயகிள் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தமிழக அரசு சார்பில் ரூ.1000 கோடி மீட்பு பணிகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி சென்று பிரதமரை சந்தித்த முதல்வர் பழனிசாமி, புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.15,000 கோடி கோரியுள்ளார்.

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து இன்று நெடுவாசல் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் அவர் பேசுகையில், பாதிக்கப்பட்ட மக்கள் தன்னம்பிக்கையை இழந்து விடாதீர்கள். தட்டுப்பாடின்றி மண்ணெண்ணெய் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். புயலால் பாதிக்கப்பட்ட தென்னை, வாழை மரங்களின் எண்ணிக்கையை ஒவ்வொருவரும் அளிக்க வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து தென்னை கன்றுகள் வரவழைக்கப்படும். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்படும் என்றார்.