கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய ரஜினி

 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறிய ரஜினி

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது ஆறுதல்களைத் தெரிவிப்பதாக ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

சென்னை: கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது ஆறுதல்களைத் தெரிவிப்பதாக ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

கஜா புயல் கரையைக் கடந்ததை தொடர்ந்து, நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் பலத்த புயல் காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. குடிசை வீடுகள் பல காற்றில் பறந்த நிலையில் மின்கம்பங்களும் ஆங்காங்கே சாய்ந்து விழுந்துள்ளன. தொலைத்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார விநியோகமும் தடை செய்யப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆறுதல்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல உதவிகளைச் செய்து வரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளைப் பாராட்டுகிறேன். நமது நிவாரண உதவிகள் தொடரட்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக கஜா புயலால் பெரும் சேதங்கள் ஏற்படக்கூடும் என முன்கூட்டியே கணிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு சிறப்பான முறையில் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.