கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம்

 

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம்

கஜா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கமளித்துள்ளது.

சென்னை: கஜா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தை மிரட்டி கொண்டிருந்த கஜா புயல் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நாகை – வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது சுமார் 100 கி.மீ மேலாக பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக 2 நாட்கள் ஆகும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே புயல் தீவிர புயலில் இருந்து புயலாக மாறி அதன் வலு குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், கஜா புயல் குறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தரப்பில், புயலால் 111 கி.மீ வேகத்தில் காற்று வீசியுள்ளது. நாகை,திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயல் காரணமாக மொத்தமாக 12,000 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. 81, 948 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.