கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

 

கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் நிதி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

சென்னை: கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் நிதி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வங்கக்கடலில் உருவான கஜா புயல் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நாகை – வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இந்த புயலானது புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் அதிக சேதத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது. பலத்த காற்று காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மின் கம்பங்கள், வீடுகள் உள்ளிட்டவை பலத்த காற்றுடன் பெய்த மழையால் கடும் சேதம் அடைந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாகை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் 461 முகாம்களில் 81,698 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கஜா புயலின் கோரதாண்டவத்தால் இதுவரை 8-கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுளார்.

இந்நிலையில், கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் நிதி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், கஜா புயலால் தற்போது வரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதகவும் முதல்வர தெரிவித்துள்ளார்.