கஜாவுக்கு வராத பிரதமரை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்…. ட்ரெண்டாகியது #GoBackModi

 

கஜாவுக்கு வராத பிரதமரை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்…. ட்ரெண்டாகியது #GoBackModi

தமிழகம் வர இருக்கும் பிரதமர் மோடிக்கு எதிராக #GoBackModi மற்றும் #GoBackSadistModi என்ற இரு ஹேஷ்டாக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.

சென்னை: தமிழகம் வர இருக்கும் பிரதமர் மோடிக்கு எதிராக #GoBackModi மற்றும் #GoBackSadistModi என்ற இரு ஹேஷ்டாக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.

மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று மதுரை வருகிறார். இதற்காக, காலை 8 மணிக்கு டெல்லியில் இருந்து  தனி விமானம் மூலம் புறப்படும் அவர் காலை 11.15 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். 

இதையடுத்து 11.30 மணிக்கு மண்டோலா நகர் திடலில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள், தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு பாஜக மாநாட்டிலும்  பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். 

trending

இந்நிலையில், கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்ட பிறகு தமிழக மக்களை சந்திக்க வராமல் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனைக்காகவும், பாஜக மாநாட்டில் பங்கேற்பதற்காகவும் தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக, #GoBackSadistModi மற்றும் #GoBackSadistModi என்ற இரு ஹேஷ்டாக்குகளை நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்த இரண்டு ஹேஷ் டாக்குகளும் இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளன. இதற்கிடையே #TNWelcomesModi என்ற ஹேஷ் டாக்கையும் பாஜகவினர் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.