கஜானாவை நிரப்புவதில் குறியாக இருக்கும் நிதி அமைச்சகம்! பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது!

 

கஜானாவை நிரப்புவதில் குறியாக இருக்கும் நிதி அமைச்சகம்! பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது!

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எக்சைஸ் மற்றும் செஸ் வரிகள் உயர்வு அமலுக்கு வந்ததால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் முன்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. கடந்தாண்டு ஜூன் முதல் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்பட தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தினந்தோறும் காலை 6 மணிக்கு பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது.

பெட்ரோல் பங்குகள்

மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான சிறப்பு கூடுதல் எக்சைஸ் வரி மற்றும் சாலை மற்றும் அடிப்படைகட்டமைப்பு செஸ் வரி உயர்த்தப்பட்டது. அதாவது (ஒரு லிட்டர்) பெட்ரோல், டீசல் விலையில் கூடுதலாக தலா ரூ.1 சிறப்பு கூடுதல் எக்சைஸ் வரி மற்றும் சாலை மற்றும் அடிப்படை அடிப்படைகட்டமைப்பு வரி விதிக்கப்படும்.

செஸ் வரி

இந்த வரி உயர்வு இன்று காலையில் அமலுக்கு வந்தது. இதனையடுத்து நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தது. தலைநகர் டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.45-ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.36-ம் உயர்ந்தது. இதன்படி டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.96-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.66.69-க்கும் விற்பனையாகிறது.

மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.57-க்கும், கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.15-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் சாமானிய மக்களும், குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.