கஜஸ்தானில் விமானம் கட்டிடத்தில் மோதி கோர விபத்து.. பயணித்த 100 பேரின் நிலை?!

 

கஜஸ்தானில் விமானம் கட்டிடத்தில் மோதி கோர விபத்து.. பயணித்த 100 பேரின் நிலை?!

முதற்கட்ட விசாரணையில் விமானத்தில் பயணித்த 7 பேர் உயிரிழந்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய ஆசியாவில் சீனா, ரஷ்யாவை எல்லையாகக் கொண்ட கஜஸ்தானில் இருந்து  நுர்-சுல்தான் என்னும் பகுதிக்கு இன்று காலை ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டது. அதில், 95 பயணிகள் மற்றும் 5 பணிப்பெண்கள் உட்பட 100 பேர் பயணித்துள்ளனர்.

tt

பெக் ஏர்லைன் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த விமானம் டேக்ஆப் ஆன இரண்டே நிமிடங்களில், அங்கிருந்த கட்டிடம் ஒன்றின் இரண்டாவது மாடி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தின் முன் பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. விமானம் மோதிய அந்த வீடு விமானத்தின் மீது இடிந்து விழுந்துள்ளது. 

ttn

தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், விமானத்தின் உள்ளே சிக்கியவர்களை மீட்கத் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் விமானத்தில் பயணித்த 7 பேர் உயிரிழந்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ttn

அந்த விமானம் டேக்ஆப் ஆனபோது போதிய உயரத்திற்கு எழும்பாமல் அங்கிருந்த கான்கிரீட் வேலியில் மோதி, பின்னர் கட்டிடத்தில் மோதியுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த மற்ற பயணிகளின் நிலை என்னவானது என்பது பற்றிய எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை.