கசப்பான சுண்டைக்காயில் இனிப்பான நன்மைகளைத் தரும் சுண்டைக்காய் சாம்பார்!

 

கசப்பான சுண்டைக்காயில் இனிப்பான நன்மைகளைத் தரும் சுண்டைக்காய் சாம்பார்!

மலிவான விலை, கசப்பு சுவை இதனாலேயே சுண்டைக்காயின் மகத்துவத்தை பொதுவாக மக்கள் அலட்சியப்படுத்துகின்றனர்.

மலிவான விலை, கசப்பு சுவை இதனாலேயே சுண்டைக்காயின் மகத்துவத்தை பொதுவாக மக்கள் அலட்சியப்படுத்துகின்றனர். உடலுக்குப் பல்வேறு நன்மைகளைத் தரக்கூடிய சுண்டைக்காயை வைத்து சாம்பார் செய்தால் தனிச் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

  • பச்சை சுண்டைக்காய்.
  • பாசிப்பருப்பு
  • வெங்காயம் 
  • தக்காளி
  • சாம்பார் பொடி
  • உப்பு 
  • பச்சை மிளகாய்
  • காய்ந்த மிளகாய்
  • பூண்டு
  • எண்ணெய்
  • கடுகு
  • கறிவேப்பிலை கொத்தமல்லி
  • பெருங்காயம்

செய்முறை: 

முதல்ல பாசிப்பருப்பை கழுவி வேக வச்சுக்கோங்க.

sundakkai

பருப்பு கொஞ்சம் வெந்ததும் காம்பு நீக்கி கழுவிய சுண்டைக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காய்ந்த மிளாகாய், பூண்டு போட்டுக்கோங்க.

sundakkai

மஞ்சப்பொடி சேர்த்துக்கோங்க.

food

சாம்பார் பொடி சேர்த்துக்கோங்க.

sambar

பெருங்காயம் சேர்த்துக்கோங்க.

salt

உப்பு சேர்த்து வேக விடுங்க..

காய்கள், பருப்புலாம் நல்லா வெந்ததும் கல்சட்டில போட்டு நல்லா மசிச்சுக்கோங்க. கல்சட்டி இல்லாதவங்க மிக்சில வைப்பர்ல போட்டு எடுத்துக்கோங்க. மிக்சில அரைக்குறவங்க ரொம்ப நைசா அரைச்சுக்கப்போறீங்க. கவனம். 

sambar

இன்னொரு பாத்திரத்தில எண்ணெய் ஊத்தி காய்ந்ததும், கடுகு போட்டு வெடிக்க விடுங்க. சாம்பார்ல காரம் பத்தலைன்னா காய்ந்த மிளகாய் போட்டு தாளிச்சுக்கோங்க. 

கறிவேப்பிலை கொத்தமல்லி போட்டு தாளிச்சு கடைஞ்சு வெச்ச சாம்பாரை ஊத்தி லேசா சூடு பண்ணிக்கோங்க. கொதிக்கனும்ன்னு அவசியமில்ல.

final sambar

 சுவையான சுண்டைக்காய் சாம்பார் ரெடி.இந்த சாம்பாரை பொங்கல், இட்லி, தோசைக்கு தொட்டுக்கலாம். செமையா இருக்கும்.