கங்கை நீரை குடிக்காதே…கங்கை ஆற்றில் குளிக்காதே… சொல்லுது சுற்றுச்சூழல் துறை!

 

கங்கை நீரை குடிக்காதே…கங்கை ஆற்றில் குளிக்காதே… சொல்லுது சுற்றுச்சூழல் துறை!

நேரடியாக மனிதர்கள் பருகுவதற்கோ,நீராடவோ கங்கை நீர் உகந்தது அல்ல என்று இந்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் எச்சரித்து இருக்கிறது.

புண்ணிய நதிகளிலேயே உயர்ந்தது என இந்திய மக்களால் நம்பப்படும்  நதி கங்கை.இந்துவாகப் பிறந்தவர்கள்,வாழ்வில் ஒருமுறையேனும் இதில் குளிக்க வேண்டும் என்பது பலரின் லட்சியம்.

நேரடியாக மனிதர்கள் பருகுவதற்கோ,நீராடவோ கங்கை நீர் உகந்தது அல்ல என்று இந்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் எச்சரித்து இருக்கிறது.

gangai river

புண்ணிய நதிகளிலேயே உயர்ந்தது என இந்திய மக்களால் நம்பப்படும்  நதி கங்கை.இந்துவாகப் பிறந்தவர்கள்,வாழ்வில் ஒருமுறையேனும் இதில் குளிக்க வேண்டும் என்பது பலரின் லட்சியம். இதனால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் இந்த நதியில் நீராடுகிறார்கள்.இந்த நிலையில்தான் இந்திய மாசுக் கட்டுப்பாட்டு துறை இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

கங்கை நதி பாயும் வழியில் 86 இடங்களில் கண்காணிப்பு மையங்கள் அமைத்திருந்தோம்.அதில் 78 இடங்களில் உள்ள நீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.கங்கை நதி நீர் முழுவதும் வீரியமான பாக்டீரியாக்கள் இருக்கின்றன.

gangai river

அதனால் இந்த நீரில் குளிப்பதோ,அதைக் குடிப்பதோ கூடாது.மேற்கு வங்கத்தில் இரண்டு இடங்களிலும், உத்தரகண்ட் மாநிலத்தில் சில இடங்களில் மட்டும் கங்கை நீரை சுத்திகரித்து குடிக்கலாம்.கண்காணிப்பு மையங்கள் உள்ள 86 இடங்களில் 18 இடங்களில் குளிப்பதற்கு ஏற்ற சூழல் உள்ளது என்று தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த நீரை பாட்டில்களில் அடைத்து ‘கங்கா ஜல்’ என்று ஆன்லைனில் விற்கிறார்கள், வாங்கி பூஜை அறையில் வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள் ; குடித்துவிடாதீர்கள்.