கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை சாதத்தால் அன்னாபிஷேகம்

 

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை சாதத்தால் அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு  கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரருக்கு விசேஷ துப, தீப, ஆராதனைகள் நடைபெறுகின்றது.

ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேக சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது. இனிப்பு,காய்கறி மற்றும் பழங்களுடன் செய்யப்படும் சுத்த அன்னாபிஷேகக் காட்சி,ஆலயத்துக்கு வழிபட வரும் பக்தர்களை பரவசத்துக்கு உள்ளாக்குகிறது.

gangai

தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன் தனது ஆட்சிக்காலத்தில் ஆயிரம் வருடத்திற்கு முன் கங்கை வரை படையெடுத்து சென்று வடபுறத்து மன்னர்களை வெற்றிக்கொண்டதன் அடை யாளமாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய நகரை உருவாக்கி அங்கு பிரகதீஸ்வரர் கோயிலை கட்டினார்.

gangai sivan

இங்கு பிரதிஷ்டை செய் யப்பட்டுள்ள 13½ அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கம் தான் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என போற்றி வணங்கப்படுகிறது. கங்கை கொண்டசோழபுரம் பிரகன் நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடத்தபடுவது வழக்கம்.இந்தாண்டிற்கான அன்னாபிஷேக விழா இன்று கொண்டாடப்படுகிறது. 

அன்னாபிஷேக தினத்தன்று 100 சிப்பம் மூட் டை கொண்ட 2,500 கிலோ பச்சரிசியைக் கொண்டு கோவில் வளாகத்தில் சமைத்து, பிரகதீஸ்வரருக்கு சாத்தப்பட்டு 50 வகையான பழங்கள், வில்வ இலை உட்பட 11 வகை இலைகள், 21 வகை பூக்களால் அலங்க ரித்து. மாலை 6 மணியளவில் மகா தீபாராதனை நடந்தப்படும்.

gangaijkl

அதன்படி ஐப்பசி பவுர்ணமியான இன்று கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் இன்று காலை முதல் அன்னாபிஷேகத்திற்காக கோயில் வளாகத்தில் சாதம் தயாரிக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதனை காணவும், அன்னாபிஷேகத்தில் பங்கேற்கவும் காலை முதலே ஏராளமான பக்தர்கள் பிரகதீஸ்வரர் கோயிலில் குவிந்தனர்.

ஐப்பசி பவுர்ணமி அன்று அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று வழிபடுவது புண்ணியம், அதைவிட சிவலிங்கத்திற்கு அன்னம் சாத்தப்பட்டு ஒவ்வொரு சாதத்து பருக்கையும் சிவ அம்சம் பெற்று, சிவரூபமாக மாறுவதால் இன்று அன்னாபிஷேகத்தை தரிசிப்பது,கைலாயம் சென்று தரிசிப்பதற்கு ஈடானதாகும்.அன்னாபிஷேகத்தை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மிகவும் சிறப்பாக செய்து உள்ளது.