ஓ.பி.எஸ்., தம்பியை விரட்டியடித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

ஓ.பி.எஸ்., தம்பியை விரட்டியடித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!

மதுரையில் இருந்து அவரை தேனிக்கு, ‘பார்சல்’ செய்து விட்டதால், மதுரை நிர்வாகிகள், ராஜேந்திர பாலாஜிக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  தம்பியை சமயம் பார்த்து  சொந்த மாவட்டத்துக்கு தள்ளி விட்டு இருக்கிறார்கள். 

கடும் எதிர்ப்புக்கு மத்தியில, தேனியில் இருந்து வந்து, மதுரை ஆவின் தலைவர் பதவியை துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா பிடித்தார். இதனால் மதுரை மாவட்ட அமைச்சர்களும், உள்ளூர் நிர்வாகிகளும், செம கடுப்பில் இருந்தார்கள்.

Rajendra balaji

அவர்கள்  பால்வளத்துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கடி தர, அவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி மதுரை ஆவின் ஒன்றியத்தை மதுரை- தேனி என இரண்டாக பிரித்து விட்டார். கூட்டுறவு சங்க விதிப்படி தேனி மாவட்டம், பெரியகுளம் ரோசி நகர் பால் கூட்டுறவு சங்கம் மூலம் இயக்குனராக தேர்வான ராஜா அந்த மாவட்டத்துக்கே கிளம்பி விட்டார்.ops

மதுரையில் இருந்து அவரை தேனிக்கு, ‘பார்சல்’ செய்து விட்டதால், மதுரை நிர்வாகிகள், ராஜேந்திர பாலாஜிக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.