ஓ.பி.எஸ் சொல்றதெல்லாம் கேட்கணுமா..? எகத்தாளம் போடும் எடப்பாடி..!

 

ஓ.பி.எஸ் சொல்றதெல்லாம் கேட்கணுமா..? எகத்தாளம் போடும் எடப்பாடி..!

சென்னையிலேயே இருந்தும் எந்த அமைச்சரும் ஓ.பன்னீரை வரவேற்க விமான நிலையத்துக்கு வரவில்லை. இதுவும் பன்னீரைப் புறக்கணிக்கும் படலத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் மறைமுகத் தேர்தல் என்று ஆன பிறகு அதிமுகவில் யார் யார் கவுன்சிலர்கள் வேட்பாளர்கள் என்ற போட்டி எல்லா மாவட்டங்களிலும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமிக்கும் இடையிலான போட்டி, வேட்பாளர் தேர்விலும் தீவிரமாகியிருக்கிறது.

அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீரும் கலந்துகொண்டார். மறைமுகத் தேர்தல் பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இதுபற்றி வெளியே யாரும் சொல்லிக்கொள்ள வேண்டாம், உரிய நேரத்தில் அரசாணை வெளியிடப்படும் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். ஆனால், எப்போது வெளியிடப்படும் என்று சொல்லவில்லை.

 eps

இந்த நிலையில்தான் அமைச்சரவைக் கூட்டத்துக்கு அடுத்த நாள் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர், ‘அப்படி ஒரு திட்டம் இல்லை. இருந்தால் உங்களைக் கூப்பிட்டுதான் சொல்லுவோம்’ என்று பதில் சொன்னார். ஆனால் ஓ.பன்னீர் பதில் சொன்ன சில மணித்துளிகளிலேயே மறைமுகத் தேர்தலுக்கான அரசாணை வெளியிடப்பட்டது.

ops

அப்படியென்றால் ஆட்சியில் தனக்கு எந்த பிடிமானமும் இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்வதாக இந்த அரசாணை வெளியீடு அமைந்திருப்பதாக ஓ.பன்னீர் கருதுகிறார். ஏற்கனவே அமெரிக்கா சென்றுவிட்டு சென்னை திரும்பிய ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்க, அவரது ஆதரவு அமைச்சரான மாஃபா தவிர வேறு யாரும் வரவில்லை. மறுநாள் அமைச்சரவைக் கூட்டத்துக்காக எல்லாரும் சென்னையிலேயே இருந்தும் எந்த அமைச்சரும் ஓ.பன்னீரை வரவேற்க விமான நிலையத்துக்கு வரவில்லை. இதுவும் பன்னீரைப் புறக்கணிக்கும் படலத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

edappadi

இதன் தொடர்ச்சிதான் உள்ளாட்சித் தேர்தலிலும் நேரடியாக எதிரொலித்திருக்கிறது. ஒவ்வொரு மாவட்டச் செயலாளரையும் தொடர்புகொள்ளும் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் தேர்வில் தனது ஆதரவாளர்கள் இத்தனை பேருக்கு சீட் வேண்டும் என்றும், அவர்களை டிக் செய்துகொள்ளுமாறும் சொல்லியிருக்கிறார். அமைச்சர்களாக இருக்கும் மாவட்டச் செயலாளர்கள் பலர் இதை முதல்வர் எடப்பாடியிடம் சொல்லியிருக்கிறார்கள். எடப்பாடியோ, ‘பாத்துக்கலாம், பாத்துக்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார்.