ஓ.பி.எஸ்- எடப்பாடி ஈகோ யுத்தம்… டி.டி.வி.தினகரன் அணிக்கு தாவும் அதிமுக ’வி.ஐ.பி’ விக்கெட்..!

 

ஓ.பி.எஸ்- எடப்பாடி ஈகோ யுத்தம்… டி.டி.வி.தினகரன் அணிக்கு தாவும் அதிமுக ’வி.ஐ.பி’ விக்கெட்..!

மீண்டும் பதவியை பிடுங்கினால் , ஓ.பிஎஸ் மட்டுமல்ல யார் தடுத்தாலும் கட்சியை விட்டு விலகி விடுவேன்’’ என எச்சரித்து வருகிறாராம் சிங்கை ராமச்சந்திரன். ஒருவேளை அவரது பதவி பறிபோனால் டி.டி.வி.தினகரன் அணிக்கு தாவ திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோவையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தராஜின் மகனான சிங்கை ராமச்சந்திரன்  ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுக ஐடி விங் மாநிலச் செயலாளராக இருந்து வருகிறார் சிங்கை ராமச்சந்திரன். சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியபோது சிங்கை ராமச்சந்திரன் ஓ.பிஎஸ் அணிக்குத் தாவினார். இதனால் அவரை நீக்கிய சசிகலா, ராஜ் சத்யனுக்கு அந்தப் பொறுப்பை கொடுத்தார்.  மீண்டும் ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் இணைந்த பிறகு ராமச்சந்திரனுக்கும், ராஜ் சத்யனுக்கும் அந்தப்பதவியை பிடிக்க முட்டல் மோதல் ஏற்பட்டது.ramachandran

ஜெயலலிதா காலத்தில் இருந்தே ராமச்சந்திரன் ஐடி அணியில் இருந்து வருகிறார். அவருக்கே மீண்டும் அந்த வாய்ப்பை கொடுக்க வேண்டும் என ஓ.பி.எஸ் தரப்பு நச்சரித்து வந்தது. இதனை சமாளிக்க முடியாத எடப்பாடி, இருவருக்கும் இன்றி பொன்னையனை தற்காலிகமாக இந்தப்பொறுப்பை பார்க்கும் படி பணித்தார். பிறகு அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆசியுடன் சிங்கை ராமச்சந்திரன் ஓரம்கட்டப்பட்டு ராஜ் சத்யன் அந்தப்பதவியை பிடித்தார். raj sathyan

மக்களவை தேர்தலுக்கு முன் அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியின், மாநிலச் செயலராக இருந்தவர், மதுரை எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன். தனது தந்தை ராஜன் செல்லப்பாவின் மூலம் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆசியுடன்  மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதனால், அவரது மாநிலச் செயலர் பதவி மீண்டும் சிங்கை ராமச்சந்திரனுக்கு கொடுத்து விட்டார்கள். ஓபிஎஸ்அவரும், மாவட்ட வாரியாக, புது நிர்வாகிகளை நியமித்து, தேர்தல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்துச் சென்றார்.  பலம் வாய்ந்த திமுக ஐடி விங்கிற்கு  சமமாக  சமூக வலைதளங்களில், தி.மு.க.,வுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார். தேர்தல் முடிவடைந்த  நிலையில, ராஜ் சத்யன் மீண்டும்  ஐ.டி., அணியின் மாநிலச் செயலாளர் பதவிக்காக, மேலிடத்தில்  காய் நகர்த்த தொடங்கி விட்டார். இதனால், ராமச்சந்திரன் தரப்பு ராஜ் சத்யன் மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறது.  ops

சிங்கை ராமச்சந்திரன் ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்தவர் என்பதால் அவரை விரும்பாத எடப்பாடி ஆதரவாளர்கள் ராஜ்சத்யனுக்கு அதிமுக ஐடி விங் மாநில செயலாளர் பதவியை பெற்றுக் கொடுத்து விட வேண்டும் என காய் நகர்த்தி வருகிறது. மீண்டும் பதவியை பிடுங்கினால் , ஓ.பிஎஸ் மட்டுமல்ல யார் தடுத்தாலும் கட்சியை விட்டு விலகி விடுவேன்’’ என எச்சரித்து வருகிறாராம் சிங்கை ராமச்சந்திரன். ஒருவேளை அவரது பதவி பறிபோனால் டி.டி.வி.தினகரன் அணிக்கு தாவ திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.