ஓ.பி.எஸ், இ.பி.எஸ், டெல்லி தலைமைக்கு தலா ஒன்று! – சுமூகமாக முடிந்த அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி சீட் பங்கீடு

 

ஓ.பி.எஸ், இ.பி.எஸ், டெல்லி தலைமைக்கு தலா ஒன்று! – சுமூகமாக முடிந்த அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி சீட் பங்கீடு

அ.தி.மு.க-வில் எம்.பி சீட் யாருக்கு என்பதை விட எந்த கோஷ்டிக்கு மூன்றாவது சீட் கிடைக்கப் போகிறது என்பதுதான் மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. எடப்பாடி ஆதரவாளருக்கு கிடைத்தால் கட்சியில் எடப்பாடி செல்வாக்கு ஓங்கிவிட்டது என்று பேச்சு வரும், அதுவே ஓ.பி.எஸ் அணிக்கு இரண்டு சீட் ஒதுக்கப்பட்டால், கட்சியை முடக்க நினைத்தவருக்கு இரண்டு சீட்டா என்று எதிர்ப்பு வரும்…

அ.தி.மு.க-வில் எம்.பி சீட் யாருக்கு என்பதை விட எந்த கோஷ்டிக்கு மூன்றாவது சீட் கிடைக்கப் போகிறது என்பதுதான் மிகப்பெரிய பிரச்னையாக இருந்தது. எடப்பாடி ஆதரவாளருக்கு கிடைத்தால் கட்சியில் எடப்பாடி செல்வாக்கு ஓங்கிவிட்டது என்று பேச்சு வரும், அதுவே ஓ.பி.எஸ் அணிக்கு இரண்டு சீட் ஒதுக்கப்பட்டால், கட்சியை முடக்க நினைத்தவருக்கு இரண்டு சீட்டா என்று எதிர்ப்பு வரும்… இதனால் எப்படி சீட்டை பங்கிட்டுக்கொள்வது என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பிரச்னை நீடித்து வந்தது. 

கடந்த முறை பா.ம.க-வுக்கு ஒரு சீட் ஒதுக்கி பிரச்னையை தீர்த்ததுபோன்று இந்த முறை மத்தியிலிருந்து வந்த அழுத்தம் காரணமாக ஜி.கே.வாசனுக்கு எம்.பி சீட் வழங்கி பிரச்னை தீர்த்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

gk-vasan

தற்போதைய எம்.எல்.ஏ-க்கள் பலம் அடிப்படையில் அ.தி.மு.க-வால் மூன்று இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடியும். எடப்பாடி அணிக்கு ஒன்று, ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு ஒன்று என்று முடிவானது. மூன்றாவது இடம் யாருக்கு என்ற போட்டி நிலவி வந்தது. இதனால், அந்த இடத்தை தங்களுக்குத் தரும்படி தே.மு.தி.க கேட்டது. ஜி.கே.வாசன் பல மாதங்களுக்கு முன்பு இருந்தே ஆர்.எஸ்.எஸ் தலைமை மூலமாக அழுத்தம் கொடுத்து வருகிறார். புதிதாக புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும் சீட் கேட்டுவந்தார். இதில் டெல்லி தலைமைக்கு ஒரு இடத்தை ஒதுக்கிவிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

kp-munusamy

எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தம்பிதுரை, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் கே.பி.முனுசாமிக்கு சீட் முடிவாகிவிட்டதாம். மாநிலங்களவை சீட் கேட்ட மற்ற அனைவரையும் டெல்லி தலைமையை காட்டி கூட்டுத் தலைமை அடக்கிவிட்டதாக கூறப்படுகிறது. தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசன் பெயருடன் அதிகாரப்பூர்வ பட்டியல் இன்று வெளியாகி உள்ளது.