ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எம்.ஏ-க்கள் தகுதி நீக்கம், என்.பி.ஆர் பற்றிப் பேச தடா… வெளிநடப்பு செய்த தி.மு.க!

 

ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எம்.ஏ-க்கள் தகுதி நீக்கம், என்.பி.ஆர் பற்றிப் பேச தடா… வெளிநடப்பு செய்த தி.மு.க!

தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின் கடைசிநாள் இன்று. ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்க இருந்த நிலையில், அரசுக்கு எதிராக வாக்களித்த 11 உறுப்பினர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தி.மு.க கேள்வி எழுப்பியது. மேலும் தேசிய மக்கள் தொகை பதிவேடு பற்றியும் பேச முயற்சி செய்தது

11 உறுப்பினர்கள் தடை நீக்கம் மற்றும் என்.பி.ஆர் பற்றிப் பேச சட்டப்பேரவையில் அனுமதி மறுக்கப்பட்டதால் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின் கடைசிநாள் இன்று. ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்க இருந்த நிலையில், அரசுக்கு எதிராக வாக்களித்த 11 உறுப்பினர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தி.மு.க கேள்வி எழுப்பியது. மேலும் தேசிய மக்கள் தொகை பதிவேடு பற்றியும் பேச முயற்சி செய்தது. இது தொடர்பான கேள்வியை அவைக் குறிப்பிலிருந்து சபாநாயகர் நீக்க உத்தரவிட்டார்.  இதைக் கண்டித்து தி.மு.க வெளிநடப்பு செய்தது.

dmk mla

இது குறித்து ஸ்டாலின் கூறுகையில், “11 உறுப்பினர்கள் தகுதி நீக்கம், என்.பி.ஆர் பற்றி பேச முயன்றோம். என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டை நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்தினோம். ஆனால், பாஜகவுக்கும், சிறைக்கும் பயந்து தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டை ஏற்றுக்கொள்கிறார்கள். மக்களைப் பற்றி இவர்களுக்குக் கவலை இல்லை. 
நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தை ஆதரித்த கட்சிகள் கூட, தங்கள் மாநிலத்தில் அதனை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக விவாதிக்க பலமுறை பேரவையில் தீர்மானம் கொடுத்தும் இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆய்வில் உள்ளது என்று கூறி ஏற்க மறுக்கிறார்கள்” என்றார்.