ஓ.பி.எஸை நம்பி நொந்து நூடுல்ஸான நிர்வாகிகள்… டி.டி.வி.தினகரன் அணிக்கு தாவ அதிரடி முடிவு..!

 

ஓ.பி.எஸை நம்பி நொந்து நூடுல்ஸான நிர்வாகிகள்… டி.டி.வி.தினகரன் அணிக்கு தாவ அதிரடி முடிவு..!

அதிர்ச்சியான அவர், தேர்தல் பணிகளை புறக்கணித்து விட்டார். அவரை சமாதானப்படுத்த, அதிமுகவினரும், தங்கள் பக்கம் இழுக்க, அமமுகவினரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

மதுரையைச் சேர்ந்தவர், முன்னாள், எம்.எல்.ஏ., முத்துராமலிங்கம். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அ.தி.மு.க., மாவட்டச் செயலராகவும் இருந்தவர்.முத்துராமலிங்கம்

தி.மு.க., ஆட்சியில் நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில், இவரை வேட்பாளராக நிறுத்திய ஜெயலலிதா, ஐந்து நாட்கள் பிரசாரம் செய்தார். அந்த தேர்தலில்தான், ஓட்டுக்கு பணம் கொடுக்கும், ‘திருமங்கலம் பார்முலா’வை, தி.மு.க.,வினர் மு.க.அழகிரியின் ஆசிர்வாதத்தோடு ஆரம்பித்து வைத்தனர்.

ஜெயலலிதாவுக்கு பிறகு, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்த முத்துராமலிங்கம், தேனி மக்களவை தொகுதியில் ஓ.பி.எஸ் மகனுக்கு தேர்தல் வேலை மாய்ந்து மாய்ந்து பார்த்தார். முத்துராமலிங்கம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு, 2016ல் சீட் கேட்டும் கிடைக்கவில்லை. இந்த முறை தமக்கு தான் சீட் என நம்பியிருந்தவருக்கு பெருத்த ஏமாற்றம். முத்துராமலிங்கம்

இதனால் அதிர்ச்சியான அவர், தேர்தல் பணிகளை புறக்கணித்து விட்டார். அவரை சமாதானப்படுத்த, அதிமுகவினரும், தங்கள் பக்கம் இழுக்க, அமமுகவினரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அவரை  அழைத்து சமாதானப்படுத்த தூதுவராய் மதுரை அதிமுக நிர்வாகியை முத்துராமலிங்கம் வீட்டிற்கு அனுப்பினாராம் துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆனால், வீட்டில் இருந்து கொண்டே இல்லை என சொல்லி நிர்வாகியை அனுப்பி விட்டாராம் முத்துராமலிங்கம். செல்போனில் ஓ.பி.எஸ் அழைத்து இருக்கிறார். அப்போது தான் முத்துராமலிங்கம் செல்போனையும் அணைத்து வைத்திருப்பது தெரிய வந்திருக்கிறது.ஓ.பி.எஸ்

மறுபுறம் மறைந்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., போஸ் குடும்பத்தினர் சீட்டு கேட்டு தராததால், அவர்கள் தரப்பும் டென்ஷனில் இருக்கிறார்கள். அவர்களிடமும் , முத்துராமலிங்கத்திடமும் டி.டி.வி.தினகரன் தரப்பு தங்கள் பக்கம் இழுக்க காய் நகர்த்தி வருகிறது.