ஓ.பி.எஸை டம்மியாக்க எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு..!

 

ஓ.பி.எஸை டம்மியாக்க எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு..!

தமிழக தண்ணீர் பிரச்னைதான் பெரிய அளவில் மக்களிடம் பேசப்பட வேண்டும் என்று திட்டமிட்டு செய்யப்பட்ட கூட்டமாகவே இது தெரிவதாக கோட்டை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

டெல்லியில் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்று இருக்கிறார் துணை முதல்வர் ஓ.பிஎஸ். டெல்லியில் அவர் பேசுவது  முக்கியத்துவம் பெறக்கூடாது என்பதற்காகவே தண்ணீர் பற்றிய திடீர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினாராம் எடப்பாடி. இப்போது டெல்லியில் ஓ.பி.எஸ் எது பேசினாலும் பெரிதாக எடுபடாது. தமிழக தண்ணீர் பிரச்னைதான் பெரிய அளவில் மக்களிடம் பேசப்பட வேண்டும் என்று திட்டமிட்டு செய்யப்பட்ட கூட்டமாகவே இது தெரிவதாக கோட்டை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. eps

அவர் பேசும்போது கூர்ந்து கவனித்தால் ‘எனக்கு பெரிதாக எந்த நோயும் இல்லை. ஜஸ்ட் செக்அப் என்றுதான் நினைக்கிறேன். எங்கள் வீட்டுக்கு 2 லாரி தண்ணீர் வருவது உண்மை தான். ஆனால் அதை நாங்கள் மட்டுமா பயன்படுத்துகிறோம். எங்கள் வீட்டுக்கு வரும் அதிகாரிகள், பார்வையாளர்கள் என எல்லோரும் தான் அந்தத் தண்ணீரை பயன்படுத்துகிறார்கள்’’ என மிகச்சரியான காரணத்தை சொன்னார் எடப்பாடி.water

’தமிழகமே தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும்போது மேம்பாலம், சாலைகள், கட்டிடங்கள், பூங்கா இவற்றை திறப்பது தான் முக்கியமா? என்று அந்த விழாவில் பங்கேற்ற பொதுமக்களில் சிலர் கொதித்து போயினர். வீடியோ கான்பரன்சிங் என்பதால் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக கேள்வி கேட்க முடியாமல் மனதில் புழங்கியபடி சென்றனர் மக்கள்.