ஓ.பி.எஸிடம் பாடம் கற்கும் எடப்பாடி… அடிமேல் அடி சறுக்கும் அதிமுக..!

 

ஓ.பி.எஸிடம் பாடம் கற்கும் எடப்பாடி… அடிமேல் அடி சறுக்கும் அதிமுக..!

உள்ளாட்சி தேர்தலில் திமுக- அதிமுக தோற்றது என்பதைவிட ஓ.பி.எஸிடம், எடப்பாடியார் கற்று வருகிறார் என்பதே உண்மை நிலவரம் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

தேனியில் ஓ.பி.எஸ் பெற்ற வெற்றியைக்கூட எடப்பாடியாரால் சேலத்தில் முழுமையாகப்பெற முடியவில்லை. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் உள்ளாட்சித் தேர்தல் என எல்லாத் தேர்தலிலும் எடப்பாடி ஆதரவாளர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டது. edappadi

ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஓரங்கட்டப் பட்டனர். இதனால்தான் ஆரம்பத்தில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்டவர்கள் எடப்பாடியாரின் ஆதரவாளர்களாக மாறினார்கள். உள்ளாட்சியில் எடப்பாடியாரின் ஆதரவாளர்களுக்கு தான் அதிகம் சீட் கொடுக்கப்பட்டது. உள்ளாட்சி பதவிகளில் தனது ஆதரவாளர்கள் அதிக அளவில் அமைத்து அதன் மூலம் பொதுக்குழுவிலும் தனது பலத்தை நிரூபித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஆகி விடலாம் என்று கணக்குப் போட்டிருந்தார் எடப்பாடி.

ஆனால், நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று என்று ஆகிவிட்டது. அதே போல் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. ஆனால் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டும் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத் தேர்தல் முடிவின் போதே முதல்வரின் முகம் சுருங்கியது. தனது மகனை எப்படியாவது மத்திய அமைச்சர் ஆக்கிவிட வேண்டும் என்று ஓ.பி.எஸ் நினைத்தார்.edappadi

அதற்கு முட்டுக்கட்டை போட்டார் எடப்பாடி. இப்படி கட்சி ஆட்சி இரண்டிலும் ஒபிஎஸிடம் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டாலும் தேர்தலில் ஓ.பி.எஸ் தான் ஜெயித்து வருகிறார். தேனி மாவட்டத்தில் ஆதிமுக பெற்ற வெற்றியுடன் முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் பெறவில்லை. உள்ளாட்சி தேர்தலில் திமுக- அதிமுக தோற்றது என்பதைவிட ஓ.பி.எஸிடம், எடப்பாடியார் கற்று வருகிறார் என்பதே உண்மை நிலவரம் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.