ஓ இதுக்குப் பேருதான் விளக்குமாறா? ஹேமமாலினி ஆச்சர்யம்!

 

ஓ இதுக்குப் பேருதான் விளக்குமாறா? ஹேமமாலினி ஆச்சர்யம்!

கவர் ட்ரைவ் அடிக்கும் விராத் கோலியின் ஸ்டைலில் அவர் துடைப்பத்தை பிடிப்பதை படத்தில் பார்க்க மறக்காதீர்கள். விஜய் சங்கருக்குப் பதிலா நான்காவது விக்கெட்டுக்கு ஹேமமாலினியை அனுப்பியிருக்கலாம்.

பாஜகவுக்கு எது நன்றாக வருகிறதோ இல்லையோ, பேரு மட்டும் நல்லா வைக்கிறாய்ங்க. ஸ்வச் பாரத் – தூய்மை இந்தியா திட்டம் என முந்தைய ஆட்சியில் துவங்கிய திட்டம் அவ்வப்போது அவர்கள் ஞாபகத்தில் வரும்போதெல்லாம், விளக்குமாறு எடுத்துவிடுவார்கள். கடந்த முறை ஒரு செடியின் அடியில் சிக்கிய ஒரு காகித குப்பையை மூன்று நிமிடம் விடாமல் போராடி மீட்ட மோடியின் வீடியோ வைரலானது. குப்பை இல்லாத இடத்தில், வேறொரு இடத்தில் இருந்து குப்பையை இறக்குமதி செய்து, ஸ்வச் பாரத் வீடியோ கொண்டாடியதை எல்லாம் டிஜிட்டல் உலகம் அவ்வளவு சீக்கிரம் மறக்காது.

Hemamalini MP sweeping Parliament campus

இன்றைக்கு திரும்பவும் அவர்கள் ஞாபகத்துக்கு வந்துவிட்டது. பாராளுமன்ற வளாகத்தை சுத்தம் செய்கிறோம் என பாஜக எம்பிக்கள் கிளம்பிவிட்டனர். அதில் ஹைலைட்டான விஷயமே முன்னாள் கனவுக்கன்னியான ஹேமமாலினி விளக்குமாறு எடுத்து பெருக்கிய அந்த கண்கொள்ளா காட்சிதான். ஹேமமாலினி துடைப்பத்தை பிடித்த லாவகமும், பெருக்கிய விதத்தையும் பார்த்தால், இதற்கு முன்னர் அவர் சினிமா காட்சிகளில்கூட துடைப்பத்தைப் பிடித்து பெருக்கியதில்லை என்பது மட்டும் தெளிவாகிறது. கவர் ட்ரைவ் அடிக்கும் விராத் கோலியின் ஸ்டைலில் அவர் துடைப்பத்தை பிடிப்பதை படத்தில் பார்க்க மறக்காதீர்கள். விஜய் சங்கருக்குப் பதிலா நான்காவது விக்கெட்டுக்கு ஹேமமாலினியை அனுப்பியிருக்கலாம்.