ஓவியா படத்தை கழுவி ஊத்திய தனஞ்செயன்

 

ஓவியா படத்தை கழுவி ஊத்திய தனஞ்செயன்

ஓவியா நடிப்பில் வெளியாகியுள்ள 90 ml படத்தின் டிரெய்லரை பார்த்து போஃப்டா நிறுவனர் தனஞ்செயன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை: ஓவியா நடிப்பில் வெளியாகியுள்ள 90 ml படத்தின் டிரெய்லரை பார்த்து போஃப்டா நிறுவனர் தனஞ்செயன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 90 ml. சிம்பு இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கவும் என குறிப்பிடப்பட்டு இதன் டிரெய்லர் துவங்குகிறது. இதில் இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் கிளாமர் காட்சிகள் அதிகமாய் இடம்பிடித்துள்ளது. இந்நிலையில் போஃப்டா நிறுவனர் தனஞ்செயன் இதுபோன்ற படங்கள் தமிழ் சினிமாவின் சாபக்கேடு என கருத்து தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர், “எனக்கு வருத்தமாகவும் கோபமாவும் உள்ளது, பணத்துக்காக இதுபோல் இளைஞர்கள் இச்சை உணர்வை தூண்டும் படங்களை எடுக்கின்றனர். இதுபோன்ற மோசமான படங்கள் ஒழிய வேண்டும். இந்த டிரெய்லரை பார்த்து நான் மிகவும் வருத்தமடைகிறேன்” என பதிவு செய்துள்ளார்.