ஓவியா படத்துக்கு உயர்நீதிமன்றம் தடை?!..

 

ஓவியா படத்துக்கு உயர்நீதிமன்றம் தடை?!..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தபின் ஓவியா நடிக்கும் படங்கள் எதாவது சர்ச்சையை சந்தித்து வருகிறது. அனிதா இயக்கத்தில் அவர் நடித்த 90 ml படத்துக்கு மாதர் சங்கம் முதல் பல தரப்பில் எதிர்ப்பு வந்தது. ஓவியா மற்றும் படக்குழு சார்ந்தவர்களை கைதுசெய்ய வேண்டும் என்ற அளவு எதிர்ப்பு இருந்தது.

சென்னை: களவாணி 2 படம் வெளியாவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தபின் ஓவியா நடிக்கும் படங்கள் எதாவது சர்ச்சையை சந்தித்து வருகிறது. அனிதா இயக்கத்தில் அவர் நடித்த 90 ml படத்துக்கு மாதர் சங்கம் முதல் பல தரப்பில் எதிர்ப்பு வந்தது. ஓவியா மற்றும் படக்குழு சார்ந்தவர்களை கைதுசெய்ய வேண்டும் என்ற அளவு எதிர்ப்பு இருந்தது. இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘களவாணி 2’ படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

kalavani

2010-ஆம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் விமல் மற்றும் ஓவியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான படம் ‘களவாணி’. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்தார் சற்குணம். அதேபோல் திட்டமிட்டபடி ‘களவாணி 2’ படமும் இயக்கி முடிக்கப்பட்டது. இதன் முதலாவது பாகம் போலவே ஓவியா, விமல், சரண்யா பொன்வண்ணன், இளவரசு மற்றும் கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

vimal

இந்த திரைப்படம் வரும் மே 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஸ்ரீ தனலட்சுமி பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த குமரன் என்பவர் தொடுத்த வழக்கின் பேரில் உயர்நீதிமன்றம் ‘களவாணி 2’ படத்தின் வெளியீடுக்கு தடை விதித்துள்ளது.

sargunam

இதுகுறித்து இயக்குனர் சற்குணம், ‘களவாணி 2’ படத்துக்கும் ஸ்ரீ தனலட்சுமி பிலிம்ஸ் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விமல் உடன் அந்நிறுவனத்துக்கு பிரச்னை இருப்பதால் வழக்கு தொடுத்திருக்கின்றனர். வெகுவிரைவில் பிரச்னை முடிந்து படம் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: படுக்கைக்கு அழைத்ததால் திரையுலகில் இருந்து விலகினேன்! பிரபல நடிகை பரபரப்பு பேட்டி!