ஓவியாவை ஃபாலோ பண்ணும் ரித்விகா: எப்படி தெரியுமா?

 

ஓவியாவை ஃபாலோ பண்ணும் ரித்விகா: எப்படி தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 2வின் வெற்றியாளர் ரித்விகா, விளம்பரம் ஒன்றில் நடித்துள்ள வீடியோ ஓவியாவை நினைவுபடுத்துவதாக உள்ளது.

சென்னை: பிக் பாஸ் சீசன் 2வின் வெற்றியாளர் ரித்விகா, விளம்பரம் ஒன்றில் நடித்துள்ள வீடியோ ஓவியாவை நினைவுபடுத்துவதாக உள்ளது.

பிக்பாஸ் முதல் சீசனில்  ஓவியாவுக்கான ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினாலும் அவருக்கான வரவேற்பு பார்வையாளர்களிடம் பல மடங்கு அதிகரித்திருந்தது. சமூகவலைதளங்களில் ஓவியா ஆர்மியை ஆரம்பித்து ரசிகர்கள் அவரைக் கொண்டாடி வந்தனர். 

இதையடுத்து ஓவியாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வந்தாலும், அவர் குறிப்பிட்ட சில படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.  இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் முதலில் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்திருந்தார். அதே போல் தற்போது பிக்பாஸ் 2-வது சீசன் வெற்றியாளர் ரித்விகாவும்  சரவணா ஸ்டோர்ஸ் கிரவுன் மால் விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இந்த விளம்பரத்தில் நடித்தது குறித்த தகவலையும், அந்த விளம்பரத்தின் வீடியோவையும் ரித்விகா தனது டிவிட்டரில் பதிவு செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.