ஓவர் காற்று மாசு! சாமி சிலைகளுக்கு முகமூடி அணிந்த கோவில் நிர்வாகம் – வைரலாகும் புகைப்படம்

ஓவர் காற்று மாசு! சாமி சிலைகளுக்கு முகமூடி அணிந்த கோவில் நிர்வாகம் – வைரலாகும் புகைப்படம்

சமீப காலமாக காற்று மாசு அதிகரித்திருப்பதால் வாரணாசியில்  உள்ள அனைத்து சாமி சிலைகளுக்கும் முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. 

சமீப காலமாக காற்று மாசு அதிகரித்திருப்பதால் வாரணாசியில்  உள்ள அனைத்து சாமி சிலைகளுக்கும் முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. 

தீபாவளி முடிந்த பின்னர் டெல்லியில் கடும் காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது.  ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அறுவடை செய்த பின்னர் விவசாய கழிவுகளை எரிப்பதும் காற்று மாசுவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. டெல்லி முழுவதும் காற்று மாசுபட்டால் புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. காற்று மாசை கட்டுப்படுத்த வாகனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் டெல்லி அரசு கடும் கட்டுப்பாட்டை விதித்துள்ளது. காற்று மாசு அதிகரித்ததால் வெளியே செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிந்தபடி செல்கின்றனர். 

statue

இந்நிலையில் காற்று மாசு கடவுளை பாதிக்காமலிருக்க வாரணாசி சிக்ரா பகுதியிலுள்ள சிவன், அம்மன் போன்ற அனைத்த சிலைகளுக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்த கோவில்களில் குளிர்காலம் தொடங்கியவுடன் அனைத்து சாமி சிலைகளுக்கும் போர்வை போர்த்துப்படும் வழக்கம் இருக்கிறதாம். அதுபோலவே தற்போது முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.