’ஓவரா சரக்கடிச்சதால ஒரு படத்துலருந்தே தூக்கிட்டாங்க’…ரகசியத்தை போட்டுடைத்த ரஜினி பட கதாநாயகி…

 

’ஓவரா சரக்கடிச்சதால ஒரு படத்துலருந்தே தூக்கிட்டாங்க’…ரகசியத்தை போட்டுடைத்த ரஜினி பட கதாநாயகி…

இங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் பெனட்டிக் டெய்லரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் தனக்குத் தோணும்போது மட்டும் காதலரை லண்டன் சென்று சந்தித்துவிட்டுத் திரும்புவார்

தொடர்ந்து ஒரு மாதகாலமாக பீர் குடித்தே பெருத்துவிட்டதால் தன்னை ஒரு படத்திலிருந்து இயக்குநர் ஒருவர் தூக்கி அடித்த கதையை வெட்கப்படாமல் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் பிரபல நடிகை ராதிகா ஆப்தே.

தமிழில் ’தோனி’, ’ஆல் இன் ஆல் அழகுராஜா’, ’வெற்றி செல்வன்’ ஆகிய படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே.’கபாலி’ படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து மேலும் பிரபலமானார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது 2 ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். விவகாரமான குறும்படங்களையும் இவர் விட்டு வைப்பதில்லை.அரைகுறை உடையிலும் துணிச்சலாக நடிக்கிறார்.

radhjika

இங்கிலாந்தை சேர்ந்த இசைக்கலைஞர் பெனட்டிக் டெய்லரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் தனக்குத் தோணும்போது மட்டும் காதலரை லண்டன் சென்று சந்தித்துவிட்டுத் திரும்புவார். இந்த நிலையில் தனது சினிமா அனுபவங்களை ராதிகா ஆப்தே பகிர்ந்தபோது, அதிக பீர் குடித்ததற்காக ஒரு படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக தெரிவித்தார்.

radhika

“ஆயுஷ்மன் இயக்கத்தில் இந்தியில் வெளியான ‘விக்கி டோனர்’ படத்துக்கு முதலில் என்னைத்தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து இருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்னால் ஒரு மாத விடுமுறையில் நான் வெளிநாடு சென்று இருந்தேன். அப்போது அந்த மாதம் முழுவதும்  அதிகமாக பீர் குடித்தேன். நிறைய உணவுகளையும் சாப்பிட்டேன்.இதனால் எனது உடல் எடை கணிசமாக கூடியது. அப்போது என் தோற்றத்தை பார்த்ததும் இயக்குனர் அதிர்ச்சியானார். படத்தில் இருந்தும் நீக்கிவிட்டார். நான் சில நாட்களில் எடையை குறைத்து விடுகிறேன் என்று சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதன்பிறகு உணவு விஷயத்தில் கவனமாக இருக்கிறேன்’என்கிறார் ஆப்தே. நடிகைகளில் எத்தனை பேருக்கு இப்படி வெளிப்படையாகப் பேசுகிற துணிச்சல் வரும்?