ஓரின சேர்க்கை தம்பதிக்கு பிறந்த குழந்தை; பாட்டியால் சாத்தியமான வினோதம்!

 

ஓரின சேர்க்கை தம்பதிக்கு பிறந்த குழந்தை; பாட்டியால் சாத்தியமான வினோதம்!

செயற்கை கருத்தரித்தல் முறையில் இதை சாத்தியப்படுத்தாலாம் என மேத்யூ எலெட்ஜ் குடும்பத்தினர் முடிவு செய்த போது, மேத்யூ எலெட்ஜ்-ன் 61வயதான தாய் செசில் எலெட்ஜ் இவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தார்

நியூயார்க்: ஓரின சேர்க்கை தம்பதியின் கருவை சுமந்து தனது பேத்தியை பெற்றெடுத்த பாட்டிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அமெரிக்காவின் நெப்ரஸ்கோ மாகாணத்தை சேர்ந்த ஓரின செர்க்கையாலர்கலான மேத்யூ எலெட்ஜ் – எலியட் டக்ஹெர்டி தம்பதி சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து, தங்களுக்கு குழந்தை ஒன்று தேவை என இந்த தம்பதியினர் விரும்பினர். ஆனால், அது சாத்தியமாகாததால், ஆனால், செயற்கை கருத்தரித்தல் முறையில் இதை சாத்தியப்படுத்தாலாம் என மேத்யூ எலெட்ஜ் குடும்பத்தினர் முடிவு செய்த போது, மேத்யூ எலெட்ஜ்-ன் 61வயதான தாய் செசில் எலெட்ஜ் இவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தார்.

mathew family

ஆனால், அவருக்கு 61 வயதானதால் அவரது கருமுட்டை குழந்தையை தாங்கும் அளவிற்கு சக்தியற்றதாக இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து தெரிவித்துள்ளனர். இந்த சமயத்தில், மேத்யூவின் சகோதரி லியா ரிப் தனது கருமுட்டையை தாய்க்கு தானமாக வழங்கினார். தொடர்ந்து, மேத்யூவின் விந்தணுக்கள் செயற்கையாக உட்செலுத்தப்பட்டு, தனது மகனின் குழந்தையை கருவில் சுமக்க தொடங்கினார் செசில் எலெட்ஜ்.

இந்நிலையில், தனது மகனின் அழகான பெண் குழந்தையை, அதாவது தனது பேத்தியை பெற்றெடுத்தார் செசில் எலெட்ஜ். அந்த குழந்தைக்கு உமா லூயிஸ் என பெயரிட்டுள்ளனர்.

mathew

நீங்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருந்து திருமணம் செய்து கொண்டீர்கள் என்றால் உங்களுக்கென ஒரு குழந்தையையும் ,தனி குடும்பத்தையும் உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதற்கு நாங்கள் உதாரணம். இன்றைய தொழில்நுட்பத்தில்  அதற்கு பல வழிகளில் இருக்கின்றன என மேத்யூ எலெட்ஜ் கூறியுள்ளார்.

உலக நாடுகள் பலவற்றில் ஓரினச்சேர்க்கைக்கு அனுமதியளிக்கப்பட்டு, அதனை பின்பற்றி வரும் நிலையில், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 377-க்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஓரினச் சேர்க்கையாளர்கள் விரும்பி உறவு வைத்துக் கொள்வதை தடுக்கமுடியாது என குறிப்பிட்டு தீர்ப்பளித்தது. அத்துடன் தன்பாலின உறவைத் தடை செய்யும் சட்டம் 377ஐ ரத்து செய்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.

எனினும், ஓரின சேர்க்கைக்கு இன்றளவும் பல்வேறு எதிர்ப்புகள் இருந்து வரும் நிலையில், ஓரின சேர்க்கை தம்பதியான மேத்யூ எலெட்ஜ் – எலியட் டக்ஹெர்டி ஆகியோரது உணர்வுகளுக்கு மதிப்பளித்த மேத்யூவின் குடும்பத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதையும் வாசிங்க

யானைக்கும் அடி சறுக்கும்: மும்பையிடம் தோல்வியை தழுவிய சென்னை!