ஓரினச்சேர்க்கை காதல்: 31 வயது காதலியை மணந்த ஜாக்கிச்சானின் 19 வயது மகள்!

 

ஓரினச்சேர்க்கை காதல்: 31 வயது காதலியை மணந்த ஜாக்கிச்சானின் 19 வயது மகள்!

பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கிச்சானின் மகள் எட்டா நக்(19), தனது ஓரினச்சேர்க்கை காதலியை திருமணம் செய்துக் கொண்டதாக அறிவித்தது ஜாக்கிச்சானை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கிச்சானின் மகள் எட்டா நக்(19), தனது ஓரினச்சேர்க்கை காதலியை திருமணம் செய்துக் கொண்டதாக அறிவித்தது ஜாக்கிச்சானை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்காப்பு கலை, ஆக்‌ஷன், காமெடி என அனைத்து ஜானரிலும் அசத்தி உலகம் முழுவதும் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் ஜாக்கிச்சான். திரைத்துறையில் ஜாக்கிச்சான் ஆற்றிய சேவைக்காக வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

1990-ஆம் ஆண்டு ஆசிய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லெய்ன் நக் என்பவருக்கும் ஜாக்கிசானுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கத்தில் பிறந்தவர் எட்டா நக். இவர் தற்போது கனடாவில் தனது ஓரினச்சேர்க்கை காதலி அட்டுன்(31) உடன் வசித்து வருகிறார். சமூக வலைத்தள பிரபலமான அட்டுனை காதல் திருமணம் செய்துக் கொண்டதாக எட்டா நக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

United by love & law ♡ On our wedding day~ . . . If you never give up on love and you put all your heart into the family youve dreamed of, an open mind and warm heart will guide you to happiness. We have been in the persuit of happiness the day we were born. Abused as children who never felt love, we have so much to give. We have concorcured our fears, accepted our faults, and now we understand that the people who hurt us are hurting still. We have all been hurt but if you can dream of love, you can find it. Love is kind, it does not judge. Love is both strength and weakness. Love can make change. Love wins! ♡ #lovewins #gaymarriage #lgbtq #fightforwhatsright #love #iloveyou #teamlove

A post shared by *:・゚✧UCHU×2✧゚・:* (@uchux2) on

முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தனது ஓரினச்சேர்க்கை காதலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, உலகிற்கே தான் ஓரினச் சேர்க்கையாளர் என்பதை எட்டா நக் தெரியப்படுத்தினார். தற்போது அதைத் தொடர்ந்து கனடா நாட்டில் பதிவு செய்யப்பட்ட தனது திருமணம் குறித்த தகவலையும் உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே தனது மகள் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை அறிந்து மன வேதனையில் இருந்த ஜாக்கிச்சானுக்கும் அவரது மனைவிக்கு, தலையில் இடி விழுந்தது போல் மகளின் திருமண செய்தி அமைந்துள்ளது. இதனால் ஜாக்கிச்சான் கடும் அன உளைச்சலில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.