ஓரினசேர்க்கையாளராகள் ஒன்றானார்கள் ,ப்ளாக் மெய்லர்கள் படமெடுத்தார்கள் -ஆப் மூலம் ஆப்பு 

 

ஓரினசேர்க்கையாளராகள் ஒன்றானார்கள் ,ப்ளாக் மெய்லர்கள் படமெடுத்தார்கள் -ஆப் மூலம் ஆப்பு 

இந்த கும்பல் பல ஓரினச் சேர்க்கையாளர்களையும் திருநங்கைகளிடமும் பணம் கொள்ளையடித்தது. சமூக களங்கம் குறித்த அச்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் செய்யாததால், கும்பலின் இந்த நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்கு தெரியாது

குருகிராமில் 50 க்கும் மேற்பட்ட எம்.என்.சி அதிகாரிகளை ஓரின சேர்க்கை ஆப் மூலம் சிக்க வைத்து பிளாக்மெயில் செய்த குற்றச்சாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இதை அந்த கும்பல் ஆரம்பத்தில் வேடிக்கைக்காக செய்தார்கள், ஆனால் அது பிரபலமடைந்தவுடன் அதை வைத்து எளிதாக பணம் சம்பாதிக்க திட்டமிட்டனர். ஓரினசேர்க்கையாளர்களுக்காக ஒரு கும்பல் ஒரு ஆப் பை உருவாக்கியது .அதை சமூக ஊடகங்களில் விட்டு பலரை அதில் உறுப்பினர்களாக சேர்த்தார்கள் .பிறகு அவர்களையெல்லாம் ஒரு நாள் ஒரு தனியான இடத்தில் இன சேர்க்கை செய்ய விட்டு அதை படமெடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்தனர். இதனால் வந்த புகாரை தொடர்ந்து சஞ்சய், சச்சின், நர் சிங், ஹசாரி லால் மற்றும் சுமித் என்பவர்களை போலீசார் கைது செய்தனர் .

dating-apps

குருக்ராம் போலீஸ் இதுபற்றி கூறுகையில், “இந்த ‘ஆப்’ பல ஓரினசேர்க்கையாளர் மற்றும் திருநங்கைகளிடையே பிரபலமடைந்தவுடன், ஒரு கும்பல் அவர்களை  குருக்ராமுக்கு அருகிலுள்ள பாழடைந்த பகுதிகளுக்கு அழைத்தது,பிறகு அந்த  உறுப்பினர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் வீடியோ கிளிப்களை உருவாக்கியவுடன், அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு பணத்தை பறிக்க பிளாக்மெயில் செய்யப்பட்டனர்” என்று அதிகாரி சங்வான் கூறினார்.

“அந்த கும்பல் பல ஓரினச் சேர்க்கையாளர்களையும் திருநங்கைகளிடமும் பணம் கொள்ளையடித்தது. சமூக களங்கம் குறித்த அச்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் செய்யாததால், கும்பலின் இந்த நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்கு தெரியாது. ஒரு பாதிக்கப்பட்டவர் பாட்ஷாப்பூர் காவல் நிலையத்தை அணுகி 2019 அக்டோபரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தபோதுதான் நாங்கள் அவர்களின் குற்றத்தை அறிந்து கொண்டோம் , “என்று போலீஸ் அதிகாரி மேலும் கூறினார். இந்த விவகாரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு  அந்த குற்றவாளிகளை போலீஸ்  திங்கள்கிழமை கைது செய்தது.