ஓரங்கட்டப்படும் ரிலையன்ஸ் ஜியோ!

 

ஓரங்கட்டப்படும் ரிலையன்ஸ் ஜியோ!

இந்தியாவில் பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது இந்நிறுவனம். மேலும் ஜியோவின் முதல் குறிக்கோள் தனக்கு லாபாம் வரவில்லை என்றால் கூட பரவயில்லை ஆனால் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு லாபம் வரக்கூடாது என்பதாகும்.

ரிலையன்ஸ் ஜியோவிற்கு கோபுரம் ஒதுக்காத ஏர்டெல்,வோடபோன், ஐடியா தொலை தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம் விதித்து தொலைத்தொடர்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

ஜியோ நிறுவனம் இந்தியாவில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்துள்ளது, குறிப்பாக இந்தியாவில் பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது இந்நிறுவனம். மேலும் ஜியோவின் முதல் குறிக்கோள் தனக்கு லாபாம் வரவில்லை என்றால் கூட பரவயில்லை ஆனால் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு லாபம் வரக்கூடாது என்பதாகும். இதனால் ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சலுகைகளை மலிவு விலையில் அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் வங்கியில் கடன்பெற்று தனது சேவைகளை நடத்தி வருகிறது, இதனிடையில் ஜியோ அறிவிக்கும் பல்வேறு சிறப்பு சலுகைகள் மூலம் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கண்டிப்பாக நஷ்டம் ஏற்படும் நிலைமை உள்ளது.

 இந்நிலையில்  ரிலையன்ஸ் ஜியோவிற்கு ஏர்டெல்,வோடபோன், ஐடியா தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் கோபுரம் ஒதுக்க இடம்விடாததாக ஜியோ மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம் விதித்து தொலைத்தொடர்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.