ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு !

 

ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு !

பாலமேடு பகுதிகளில் நடக்க உள்ள ஜல்லிக்கட்டுகளையும் தென்மண்டல காவல்துறை தலைவர் கண்காணிப்பில் நடத்த வேண்டும் என்றும் விழாக்குழு தலைவர்களுக்கு உத்தரவிட்டனர். 

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த சிலர், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு தலைமை வகிக்கும் நபர் கணக்கு வழக்குகளை சரியாக பார்ப்பது இல்லை என்றும் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்றும் ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் பங்கேற்க  பட்டியலின சமூகத்தினருக்கு வாய்ப்பு அளிப்பதில்லை என்றும் உயர்நீதி மன்றமதுரை கிளையில் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, அனைத்து மக்களும் கலந்து கொள்ளும் விதத்துடன் கூடிய விழாக்குழுவை அமைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 

ttn

இன்று அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை மற்றும் மாநகராட்சி ஆணையர்களை கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டனர். மேலும்,  அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடக்க உள்ள ஜல்லிக்கட்டுகளையும் ஊராட்சி மன்ற உதவி இயக்குநர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தென்மண்டல காவல்துறை தலைவர் ஆகியோர் கண்காணிப்பில் நடத்த வேண்டும் என்றும் விழாக்குழு தலைவர்களுக்கு உத்தரவிட்டனர்.