ஓய்வுக்கு பிறகே கமல்ஹாசனின் தேர்தல் பணி : ம.நீ.ம துணைத் தலைவர் தகவல்!

 

ஓய்வுக்கு பிறகே கமல்ஹாசனின் தேர்தல் பணி : ம.நீ.ம துணைத் தலைவர் தகவல்!

நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவருமான கமல்ஹாசன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் படிக்கட்டில் தவறி விழுந்ததால் அவருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது. அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வலது காலில் உலோகத் தகடு வைக்கப்பட்டது. பின்னர், அதனை நீக்க மீண்டும் ஒரு சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் கட்சிப் பணிகள், தேர்தல் பிரச்சாரம், பிக் பாஸ், ஷூட்டிங் என தனது பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்.

ஓய்வுக்கு பிறகே கமல்ஹாசனின் தேர்தல் பணி : ம.நீ.ம துணைத் தலைவர் தகவல்!

தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் பல மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டதால், மீண்டும் வலது காலில் வலி ஏற்பட்டது. இதன் காரணமாக, சென்னை போரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்ட கமல்ஹாசன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் ஒரு வாரத்திற்கு மேல் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.

ஓய்வுக்கு பிறகே கமல்ஹாசனின் தேர்தல் பணி : ம.நீ.ம துணைத் தலைவர் தகவல்!

இந்த நிலையில், கமல்ஹாசன் மருத்துவ ஓய்வுக்கு பின்னர் தான் தனது அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் என மக்கள் நீதிமய்யத்தின் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்திருக்கிறார். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கமல்ஹாசனுக்கு செய்யப்பட்டிருக்கும் இந்த அறுவை சிகிச்சையால், அவர் மீண்டும் சுற்றுப் பயணம் மேற்கொள்வது என்பது முடியாத காரியம் என தகவல்கள் கூறுகின்றன.