‘ஓம்’, ‘பசு’ வார்த்தைகளை கேட்டாலே சிலருக்கு ஷாக் அடிப்பது போல் உள்ளது: பிரதமர் மோடி பேச்சு!

 

‘ஓம்’, ‘பசு’ வார்த்தைகளை கேட்டாலே சிலருக்கு ஷாக் அடிப்பது போல் உள்ளது: பிரதமர் மோடி பேச்சு!

ஓம் மற்றும் பசு என்ற வார்த்தைகளைக் கேட்டாலே சிலர் ஷாக் அடித்தது போல உணர்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

மதுரா: ஓம் மற்றும் பசு என்ற வார்த்தைகளைக் கேட்டாலே சிலர் ஷாக் அடித்தது போல உணர்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

modi

பிரதமர் நரேந்திர மோடி  உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில் கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடும் திட்டத்தைத் தொடக்கிவைத்தார். அப்போது  ராதே ராதே எனக் கூறி பேச  தொடங்கிய அவர்,  ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள ருவாண்டா  நாட்டில் அரசு இலவசமாக மக்களுக்குப் பசு ஒன்று தருகிறது. அந்த பசு ஈன்றும் முதல் கன்றுக்குட்டி பசு இல்லாத மற்றவர்களுக்குத் தரப்படுகிறது. இதன்மூலம் அனைவர்க்கும் பசு கிடைக்கும். ஆனால்  இந்தியாவில் ஓம் மற்றும் பசு என்ற வார்த்தைகளைக் கேட்டாலே சிலர் ஷாக் அடித்தது போல உணர்கிறார்கள்’ என்றார். 

modi

தொடர்ந்து பேசிய அவர், ஓம் மற்றும் பசு என்ற வார்த்தைகள் இந்தியாவை 16ஆம் நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்லும் என்று நினைக்கிறார்கள். உண்மையில் இதுபோன்ற சிந்தனைகள் கொண்டவர்கள்,  இந்தியாவைச் சிறுமைப்படுத்த முயற்சி செய்கின்றனர்’ என்று கூறினார்.