ஓப்போ புதிய ஸ்மார்ட்போன்கள் 10x ஹைப்ரிட் ஆப்டிக்கல் ஸூம் தொழில்நுட்பத்துடன் வெளியாகவுள்ளதா?

 

ஓப்போ புதிய ஸ்மார்ட்போன்கள் 10x ஹைப்ரிட் ஆப்டிக்கல் ஸூம் தொழில்நுட்பத்துடன் வெளியாகவுள்ளதா?

ஓப்போ புதிய ஸ்மார்ட்போன்கள் 10x ஹைப்ரிட் ஆப்டிக்கல் ஸூம் தொழில்நுட்பத்துடன் வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

டெல்லி: ஓப்போ புதிய ஸ்மார்ட்போன்கள் 10x ஹைப்ரிட் ஆப்டிக்கல் ஸூம் தொழில்நுட்பத்துடன் வெளியாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

ஓப்போ நிறுவனம் புதிய ஹைப்ரிட் ஆப்டிக்கல் ஸூம் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொழில்நுட்பம் மூலம் ஸ்மார்ட்போன் கேமராக்களில் 10 மடங்கு அளவுக்கு ஸூம் செய்யும் வசதி ஏற்படும். ஓப்போ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான ஓப்போ எஃப்9 மற்றும் ஓப்போ எஃப்9 ப்ரோ ஆகியவற்றில் இந்த புதிய தொழில்நுட்பம் இடம்பெற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவ்வாறு இடம்பெற்றால், ஹைப்ரிட் ஆப்டிக்கல் ஸூம் தொழில்நுட்பம் உடைய முதல் ஸ்மார்ட்போன் மாடல்களாக அவை இருக்கும். மேலும், ஹுவாய் நிறுவனமும் கிட்டத்தட்ட இதேமாதிரியான ஒரு தொழில்நுட்பத்தை வடிவமைத்து வருவதாகவும் கூறப்படுகிறது. அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் மாநாடு நிகழ்வில் இந்த தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட்போன்களை ஓப்போ நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.