ஓப்போ கே1 ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் தொடங்கியது

 

ஓப்போ கே1 ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் தொடங்கியது

இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார் கொண்ட ஓப்போ கே1 ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் தொடங்கியுள்ளது.

டெல்லி: இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார் கொண்ட ஓப்போ கே1 ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் ஓப்போ கே1 ஸ்மார்ட்போன் கடந்த 6-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் இன்று முதல் தொடங்கியுள்ளது. பியானோ பிளாக் மற்றும் அஸ்ட்ரல் ப்ளூ ஆகிய நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. 4ஜிபி ரேம் கொண்ட ஓப்போ கே1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு 10 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்களாக 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 16 எம்.பி + 2 எம்.பி இரட்டை பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 25 எம்.பி செல்ஃபி கேமரா, இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், 3600 எம்.ஏ.ஹெச் பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளன.