ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்2 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் – விலை, சிறப்பம்சங்கள் உள்ளே

 

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்2 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் – விலை, சிறப்பம்சங்கள் உள்ளே

ஓப்போ நிறுவனத்தின் ஃபைண்ட் எக்ஸ்2 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

பெய்ஜிங்: ஓப்போ நிறுவனத்தின் ஃபைண்ட் எக்ஸ்2 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சர்வதேச சந்தையில் ஓப்போ நிறுவனத்தின் ஃபைண்ட் எக்ஸ்2 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஃபைண்ட் எக்ஸ்2 மற்றும் ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இரு ஸ்மார்ட்போன்களிலும் 6.7 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் OLED டிஸ்பிளே, 32 எம்.பி செல்ஃபி கேமரா, ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 5ஜி வசதி, வேப்பர் சேம்பர் லிக்விட் கூலிங், மல்டிலேயர் கிராஃபைட், 48 எம்.பி பிரைமரி கேமரா ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

ttn

பிளாக் மற்றும் செராமிக் பேக், ஓசன் மற்றும் கிளாஸ் பேக் ஆகிய நிறங்களில் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. அதேபோல பிளாக் மற்றும் செராமிக் பேக், ஆரஞ்சு மற்றும் வெகன் லெதர் பேக் ஆகிய நிறங்களில் ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

இந்திய மதிப்பின்படி இந்த ஸ்மார்ட்போன்களின் விலையை பொறுத்தவரை ஃபைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி மாடல் ரூ.83,320 என்றும், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி மாடல் ரூ.58,575 என்றும், அதன் 256ஜிபி மெமரி மாடல் ரூ.63,910 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ரூ.1,00,535 மற்றும் ரூ.74,850 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.