”ஓபிஎஸ் மகன் ராஜினாமா செய்யணும்…” -வழிமொழிந்த உதயநிதி

 

”ஓபிஎஸ் மகன் ராஜினாமா செய்யணும்…” -வழிமொழிந்த உதயநிதி

ஓ. பி. ரவீந்திநாத் ராஜினாமா செய்ய வேண்டுமென பொதுமக்கள் திரளாக கூடி முழக்கம் எழுப்ப, அவர்களின் கருத்தை உதயநிதி வழிமொழிந்தார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில தினங்களாக தேனி மாவட்டத்தில், விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகிறார்.

”ஓபிஎஸ் மகன் ராஜினாமா செய்யணும்…” -வழிமொழிந்த உதயநிதி

ஆண்டிப்பட்டியில் பொதுமக்கள், நெசவாளர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியவர், ‘’தர்மயுத்தம் என்ற பெயரில் பதவிக்காக போலி நாடகம் நடத்திய ஓ.பன்னீர்செல்வத்தின் ஊழல் பட்டியலை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்தேன’’என்று அதுகுறித்து தெரிவித்துள்ளார்.

போடி தொகுதி-கோடாங்கிபட்டியில் பொதுமக்கள்-கழக தோழர்கள் மத்தியில் உரையாற்றிபோது, ‘ஊழல் செய்து ஓ.பன்னீர்செல்வம் வளர்ந்தாரே தவிர எங்கள் தொகுதியில் வளர்ச்சியில்லை’ என்ற போடி தொகுதி மக்களிடம், ‘துணை முதல்வரை அவரின் சொந்த தொகுதியிலே தோற்கடிப்போம்’ என பேசினார்.

”ஓபிஎஸ் மகன் ராஜினாமா செய்யணும்…” -வழிமொழிந்த உதயநிதி

கம்பம் தொகுதி- அனுமந்தம்பட்டியில், ‘’ ஊழல் செய்யவே நேரம் போதாமல் மக்களை மறந்த மாவட்ட அமைச்சரான துணை முதல்வர், சொத்து வாங்க மட்டும் வரும் அதிமுக எம்.எல்.ஏ பற்றி விரிவாக எடுத்துரைத்து பேசினேன்’’என்றும், ஆண்டிப்பட்டி தொகுதி-மொட்டனூத்தில் வாழை-வெங்காய விவசாயிகளுடன் கலந்துரையாடிவர், அதுகுறித்து ’’அடிமைகளின் முறையற்ற நிர்வாகத்தால் அடிக்கடி வெங்காய விலை உயருகிறதே தவிர விவசாயிகள் வாழ்வு மேம்படவில்லை’ என்றவர்களிடம், ‘கழக ஆட்சியில் விடியல் வரும் என உறுதியளித்தேன்’’என்று தெரிவித்துள்ளார்.

”ஓபிஎஸ் மகன் ராஜினாமா செய்யணும்…” -வழிமொழிந்த உதயநிதி

மரிக்குண்டில் விவசாயிகள், பொதுமக்களிடம் கலந்துரையாடிது குறித்து, போதிய நீர்வரத்து இல்லாததால் விவசாயம் கேள்விக்குள்ளாகியுள்ளது என்றவர்களிடம், ‘விவசாயிகளின் நிலை உணராத அரசுக்கு முடிவுகட்டுவோம்’ என பேசினேன் என்று பேசியுள்ளார்.

பெரியகுளத்தில் அந்த தொகுதிக்கான மாவட்ட கழக அலுவலகத்தை திறந்து வைத்த உதயநிதி, புதிய அலுவலகத்தில் தொடங்கவுள்ள கழகப்பணிகள் யாவும் வெல்லட்டும் என வாழ்த்தினார்.

”ஓபிஎஸ் மகன் ராஜினாமா செய்யணும்…” -வழிமொழிந்த உதயநிதி

பின்னர், பிரச்சாரத்தின் போது, 3 வேளாண் சட்டங்களை ஆதரித்த தேனி மக்களவை உறுப்பினர் ஓ. பி.ரவீந்திநாத் ராஜினாமா செய்ய வேண்டுமென பொதுமக்கள் திரளாக கூடி முழக்கம் எழுப்பினர். அவர்களின் கருத்தை உதயநிதி வழிமொழிந்து பேசினார்.