ஓபிஎஸ் – தினகரன் சந்திப்பு: அதிமுக தலைவர்கள் சொல்வது என்ன?

 

ஓபிஎஸ் – தினகரன் சந்திப்பு: அதிமுக தலைவர்கள் சொல்வது என்ன?

டிடிவி தினகரனுடன் துணை- முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அதிமுக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை: டிடிவி தினகரனுடன் துணை- முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அதிமுக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க தினகரனை சந்தித்து துணை-முதல்வர் ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் தங்க.தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார்.

நேற்று மாலை அவர் வெளியிட்ட இந்த தகவல், தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி. தினகரனும், சந்திப்பு நடந்தது உண்மை தான் என உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதன் விவரங்கள் வருமாறு,

கேபி. முனுசாமி (அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்): தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்த தினகரன் முயற்சி செய்கிறார். கட்சியிலும் ஆட்சியிலும் குழப்பத்தை ஏற்படுத்த அவர் எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறாது.

தங்கமணி (மின்சாரத்துறை அமைச்சர்): அதிமுகவுடன் இணைவதற்கு 2 மாதத்திற்கு முன் டிடிவி தினகரன் தூது அனுப்பினார். இது தொடர்பான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.

ராஜேந்திர பாலாஜி (பால்வளத்துறை அமைச்சர்): தினகரன் கூறுவதுபோல் எதுவுமே நடக்கவில்லை. முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஒற்றுமையாக உள்ளனர்.

கடம்பூர் ராஜூ (தகவல் மற்றும் விளம்பர துறை அமைச்சர்): அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் காணாமல் போனது தான் வரலாறு. அதை தினகரன் புரிந்து கொள்ள வேண்டும்.