ஓபன் நாமினேஷன்: ஹவுஸ் மேட்ஸ்க்கு செக் வைத்த பிக் பாஸ்! 

 

ஓபன் நாமினேஷன்: ஹவுஸ் மேட்ஸ்க்கு செக் வைத்த பிக் பாஸ்! 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கடந்த வாரம் மக்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்து மீரா எலிமினேட் ஆனார். அதைதொர்ந்து வார முதல் நாளான இன்று நாமினேஷன் படலம் நடைபெறுவது வழக்கம். இந்த நாமினேஷன் ரகசியமாக நடைபெறுவதால் யார் யாரை நாமினேஷன் செய்கிறார்கள் என்பது மற்றவர்களுக்கு தெரியாது. பல சமயம் நண்பர்களே கூட நாமினேஷன் செய்ததுண்டு. 

இந்த நிலையில் இந்த முறை பிக் பாஸ் வீட்டில் முதல் முறையாக ஒப்பன் நாமினேஷன் நடைபெறுகிறது. இதை கேட்ட போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதற்கான புரோமோ வெளியாகியுள்ளது. அதில்  முதல் நபராக நாமினேஷன் செய்ய சென்ற லாஸ்லியா, மதுமிதா மற்றும் சாக்ஷியை நாமினேட் செய்கின்றார். காரணம் கூறுகையில்,’சாண்டி பிரச்சனையில் அவர் ஏற்கனவே மன்னிப்பு கேட்ட பின்னரும் கூட அந்த பிரச்சனையை மிண்டும் கிளப்புவதைத் தான் விரும்பவில்லை’ என்று கூறியுள்ளார்.

மேலும் இவரை தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் யார் யாரை நாமினேஷன் செய்யப் போகின்றனர் என்பதை இன்றைய எபிசோடில்  பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.