ஓட்டு மிஷின்ல மட்டும் ஏதாவது தப்பு இருந்துச்சி தெருவுல ரத்த ஆறு ஓடும்: மிரட்டல் விடுக்கும் முன்னாள் அமைச்சர்!

 

ஓட்டு மிஷின்ல மட்டும் ஏதாவது தப்பு இருந்துச்சி தெருவுல ரத்த ஆறு ஓடும்:  மிரட்டல் விடுக்கும் முன்னாள் அமைச்சர்!

ஓட்டு எந்திரத்தில் ஏதேனும்  மோசடி நடந்திருந்தால் தெருக்களில் ரத்த ஆறு ஓடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சர்ச்சையாகப் பேசியுள்ளார். 

பீகார்:  ஓட்டு எந்திரத்தில் ஏதேனும்  மோசடி நடந்திருந்தால் தெருக்களில் ரத்த ஆறு ஓடும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சர்ச்சையாகப் பேசியுள்ளார். 

மத்திய ஆட்சியை தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 7 கட்டமாக நிறைவு பெற்றுள்ளன. இதையடுத்து நாளை வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து நாடே காத்திருக்கிறது. இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள்  பெரும்பாலும் பாஜகவிற்குச் சாதகமாகவே இருக்கிறது.

bjp

அதுமட்டுமின்றி வாக்கு எண்ணிக்கையின் போது  மத்தியில் ஆளும் ஆளுங்கட்சி பல்வேறு குளறுபடிகளைச் செய்யும் என்றும் அதனால் தான்  ஓட்டு எந்திரங்கள் யாருக்கும் தெரியாமல் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள்  குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. 

அந்த வகையில் வாக்கு  எண்ணிக்கை குறித்துப் பேசியுள்ள பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஷ்டீரிய லோக் சமதா கட்சி தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான உபேந்திர குஷ்வகா, பாஜக தேர்தல் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் மக்களை திசை திருப்பப் பார்க்கின்றனர். அவர்கள் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். வாக்கு எண்ணிக்கையில் தில்லுமுல்லு செய்யவே ஓட்டு எந்திரங்கள்  பல இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Upendra Kushwaha

தொடர்ந்து பேசியுள்ள அவர், மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது. ஓட்டு  எந்திரங்களில்  ஏதேனும் மோசடி நடந்தால், நாங்கள் எந்த எல்லைக்கும் போவோம். ஆயுதங்களை ஏந்தி போராடவும் செய்வோம். குறிப்பாக மோசடி நடக்கும்  பட்சத்தில் தெருக்களில் ரத்த ஆறு ஓடும்’ என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வகாவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.