‘ஓட்டு போட்டுட்டு பொங்கல் பரிசு வாங்கிக்கோங்க’… அமைச்சர் விஜயபாஸ்கரின் சர்ச்சை பேச்சு !

 

‘ஓட்டு போட்டுட்டு பொங்கல் பரிசு வாங்கிக்கோங்க’… அமைச்சர் விஜயபாஸ்கரின் சர்ச்சை பேச்சு !

மு.க ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்ததால் தேர்தல் நடக்கும் 27 மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு வழங்க நீதிமன்றம் தடை விதித்தது.

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அது மட்டுமில்லாமல், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்ததால் தேர்தல் நடக்கும் 27 மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு வழங்க நீதிமன்றம் தடை விதித்தது. மீதமுள்ள 9 மாவட்டங்களிலும் வழங்கலாம் என்றும் தெரிவித்தது. 

ttn

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கியுள்ளன. கரூர் மாவட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், அதிமுக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

tttn

அதில் பேசிய அமைச்சர், “கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பொங்கல் பரிசு வழங்கும் பணிகளை ஆரம்பித்தோம். ஆனால், மு.க ஸ்டாலின் நீதிமன்றம் சென்றதால் வழங்க முடியவில்லை. வழக்கமாகப் பொங்கல் பரிசு வாங்கிக் கொண்டு தான் ஓட்டுப் போடுவீர்கள். இந்த முறை ஓட்டுப்போட்டு விட்டுப் பொங்கல் பரிசு வாங்கிக் கொள்ளுங்கள்” என்று கூறினார். இவ்வாறு அவர் கூறியது அரசு வாக்குக்கு பணம் கொடுப்பது போல இருந்ததால் பெரும் சர்ச்சைக்குள்ளானது.