‘ஓட்டு போட்டா போடுங்க போடாட்டி போங்க’: தம்பிதுரையின் அடாவடி பேச்சு; வெற்றி வாய்ப்பை பாதிக்குமா?

 

‘ஓட்டு  போட்டா போடுங்க போடாட்டி போங்க’: தம்பிதுரையின் அடாவடி பேச்சு; வெற்றி வாய்ப்பை பாதிக்குமா?

தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘ஓட்டு போட்டா போடுங்க, போடாட்டி போங்க என்று  அதிமுக வேட்பாளர் தம்பிதுரை பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர்: தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘ஓட்டு போட்டா போடுங்க, போடாட்டி போங்க என்று  அதிமுக வேட்பாளர் தம்பிதுரை பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தல்

ec

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து, தமிழக தேர்தல் களம் சூடுபிடித்து வருகின்றது. அ.தி.மு.க, தி.மு.க ஆகிய கட்சிகள் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர். அதன்படி  கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை  தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக ஏமூர் புதூர் காலனிக்கு நேற்று  வந்திருந்தார். 

நீங்க ஓட்டு போட்டா போடுங்க, போடாட்டி போங்க

thambidurai

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், குடிநீர் வசதி இல்லை, குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது போன்ற அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து, தம்பிதுரையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த தம்பிதுரை, நீங்க ஓட்டு போட்டா போடுங்க, போடாட்டி போங்க. அதற்காக உங்க கைல, காலுல விழ முடியாது. நான் வராமல் போய்விடமாட்டேன். மீண்டும் உள்ளாட்சி தேர்தலுக்காக வருவேன்.  பேருந்து வசதி, ரூ.81 கோடியில் குடிநீர் திட்டம் போன்றவற்றை ஏற்பாடு செய்ய கூறியுள்ளேன். இதற்கு முன் இருந்தவர்கள் என்ன செய்தார்கள் என்று ஆவேசம் பொங்க  கூறினார். 

மக்கள் அதிருப்தி

thambidurai

தம்பிதுரையின் இந்த பேச்சால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்தனர். ஓட்டு கேட்க வரும் போதே இவர் பேசுகிறாரே? இன்னும் இவர் தேர்தலில் ஜெயிச்சு எம்பி ஆகிட்டா? என்ன பேச்சு பேசுவாரு என்று அப்பகுதி மக்கள் முணுமுணுத்துச் சென்றனர்.  

வெற்றி வாய்ப்பை பாதிக்குமா? 

thambidurai

முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்த போதே, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் அடாவடி செய்த  தம்பிதுரை, தற்போது மக்கள் மத்தியில் இவ்வாறு பேசியிருப்பது, அவரது வெற்றி வாய்ப்பை பாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

இதையும் வாசிக்க: சூப்பர் ஸ்டார்…லேடி சூப்பர் ஸ்டார்…எதிர்பார்ப்பை எகிறவைத்த லைக்கா!