ஓட்டு போட்டால் டூ வீலர்களுக்கு அபராதம் கிடையாது! ஆளுங்கட்சியின் அடடே அறிவிப்பு!

ஓட்டு போட்டால் டூ வீலர்களுக்கு அபராதம் கிடையாது! ஆளுங்கட்சியின் அடடே அறிவிப்பு!

’வானவில்லை வளைச்சு தொகுதி முழுக்க தோரணம் கட்டுவேன்… வீட்டு வாசலில் புள்ளி வெச்சு கோலம் போடுவேன்’ என்று விதவிதமாக தேர்தல் நேரத்தில் வாக்காளர்களின் காதல் முழம் முழமாய் வாக்குறுதி பூக்களை மாட்டி விடுவது வேட்பாளர்களின் வழக்கம் தான் என்றாலும், அதிரடியாய் ஆளுங்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருத்தர் வாக்குறுதி கொடுத்து, தொகுதி மக்களை பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.

thutham

வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று நீதிமன்றம் உட்பட பல காலகெடுவிற்குப் பிறகு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  மத்திய அரசு பெரும் போராட்டங்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் பிறகு திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை நாடு முழுவதும் அமலுக்குக் கொண்டு வந்தது. பல மாநில மக்களிடையே இந்த சட்டத்திற்கு எதிர்ப்புகள் எழுந்தாலும், மக்களை அபராத தொகை பயமுறுத்தி வந்தாலும் சிக்னல்களிலும், சாலைகளிலும் வாகனங்கள் போக்குவரத்து விதிகளை அபராதத்திற்கு பயந்தாவது கடைப்பிடித்து வருவதையும் காண முடிந்தது. 
இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் ஆளும் பாஜக கட்சியின் வேட்பாளரான துதாரம் பிஷோனி, தேர்தலில் தனக்கு வாக்களித்தால் போக்குவரத்து விதிகளை மீறும் போது அதிகபட்ச அபராதத்தை நீங்கள் செலுத்த தேவையிருக்காது என்று சொல்லி வாக்கு சேகரித்து வருவது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. ஹரியானா மாநிலத்தில் வருகின்ற 21ம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் எப்படியாவது வெற்றிப் பெற்றுவிட வேண்டும் என்பதற்காக பாஜக வேட்பாளர் இந்த வாக்குறுதியை அறிவித்துள்ளார். அவர் பேசிய அந்த வீடியோ தற்சமயம் வைரலாகி வருகிறது.

police

என்னை எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுத்தால் அதிகபட்ச அபராதம், போதை பொருள், உங்கள் மகன் மற்றும் மகள்களின் படிப்பு போன்றவற்றைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது  எந்த கட்சியி, புதிய அபராத திட்டத்தைக் கொண்டு வந்ததோ, அதே கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் இப்படி வாக்குறுதி அளித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.