ஓட்டு போடலனா? அபராதம்- அசத்தும் ஆஸ்திரேலிய அரசு!! 

 

ஓட்டு போடலனா? அபராதம்- அசத்தும் ஆஸ்திரேலிய அரசு!! 

வாக்காளர்கள் தேர்தலில் ஓட்டுப்போடாவிட்டால் அபராதம் செலுத்துங்கள். அதுவும் முடியவில்லை என்றால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆஸ்திரேலிய அரசாங்கம் மிரட்டியுள்ளது. 

வாக்காளர்கள் தேர்தலில் ஓட்டுப்போடாவிட்டால் அபராதம் செலுத்துங்கள். அதுவும் முடியவில்லை என்றால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆஸ்திரேலிய அரசாங்கம் மிரட்டியுள்ளது. 

வேலைப்பளுவின் காரணமாகவோ, வெளியூர்களில் இருக்கும் காரணத்தினாலோ அல்லது வாக்களிக்க விருப்பம் இல்லாததாலோ ஏராளமான வாக்குகள் தங்களது வாக்குகளை செலுத்துவதில்லை. ஏனெனில் வாக்களிக்க விரும்பவில்லை அல்லது வாக்களித்தால் எந்த பலனும் கிடைக்காது என்கிற புரிதல் அனைத்து நாடுகளை சேர்ந்த வாக்காளர்களின் எண்ணமாகவுள்ளது. இதனால் போலியாக வாக்குகள் செலுத்தப்பட்டு வாக்காளர்களின் வாக்குகள் கள்ளஓட்டாக மாற்றப்படும் கொடூரம் இன்றும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. தேர்தலில் வாக்களிப்பதும், நமக்கான தலைவரை நாமே தேர்வு செய்வதும் நமது ஜனநாய கடமை. ஆகவே தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டுமென புதிய திட்டத்தை ஆஸ்திரேலிய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. 

இதனை மீறியும் வாக்களிக்க தவறுபவர்கள் தகுந்த காரணத்தை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். அப்படி அளிக்காவிட்டால் அவர்களுக்கு முதற்கட்டமாக 1400 ரூபாயும், தாமதமாக கட்டுபவர்களுக்கு 12000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் இருந்தால் வாக்களிக்காதவர்களின் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனத்தின் உரிமங்கள் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. வாக்காளர்களுக்கு பொறுப்பு வரவேண்டும் என்பதற்காகவே இத்தகைய திட்டத்தை அமல்படுத்தியுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது மாதிரியான சட்டங்களை இந்தியா கொண்டுவந்தால் கண்டிப்பாக ஒவ்வொரு உண்மையான ஜனநாயக மாற்றம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.