ஓட்டுப்போட உரியப் பேருந்து வசதிகளை அரசு ஏற்படுத்தாதது ஏன்?… போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மக்கள் !

 

ஓட்டுப்போட உரியப் பேருந்து வசதிகளை அரசு ஏற்படுத்தாதது ஏன்?… போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மக்கள் !

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் தங்களது ஜனநாயக பணிகளை ஆற்றுவதற்காக அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

ttn

வெளியூரில் தங்கி பணிபுரியும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல நேற்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.ஆனால், அங்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அங்கிருந்த காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். 

ttn

இது குறித்துப் பேசிய மக்கள், ஓட்டுப் போடுவதற்குச் சொந்த ஊருக்குச் செல்ல இங்கே மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பேருந்துகள் இயக்கப்படவில்லை. உங்களது ஜனநாயக கடமையை ஓட்டுப்போட்டு நிறைவேற்றுங்கள் என்று கூறும் அரசு, ஓட்டுப் போட வருபவர்களுக்கு உரியப் பேருந்து வசதியை ஏற்படுத்தாதது ஏன் என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.