ஓட்டுபோட்டதால் வந்த சர்ச்சை: முதல் முறையாக வாய்திறந்த சிவகார்த்திகேயன்

 

ஓட்டுபோட்டதால் வந்த  சர்ச்சை: முதல் முறையாக வாய்திறந்த சிவகார்த்திகேயன்

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத சர்ச்சை குறித்து முதல் முறையாக நடிகர் சிவகார்த்திகேயன்
வாய்திறந்துள்ளார். 

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத சர்ச்சை குறித்து முதல் முறையாக நடிகர் சிவகார்த்திகேயன் வாய்திறந்துள்ளார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நிறைவு பெற்றது. அதில் சிவகார்த்திகேயன் பெயர் முதலில் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று செய்தி வெளியானது. பின்னர் சிறிது நேரத்தில் சிவகார்த்திகேயன் தனது கடமையை நிறைவேற்றிவிட்டதாக அறிவித்தார். 

இது குறித்து பல்வேறு சர்ச்சை எழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,சிவகார்த்திகேயனிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிராத சாஹு தெரிவித்திருந்தார். ஆனால், இந்த விஷயத்தில் ஏன் கடைசி வரை சிவகார்த்திகேயன் வாய் திறக்கவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பினர். 

sivakarthikeyan

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் பட விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது இந்த சர்ச்சை பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, ‘நான் இந்திய  நாட்டின் குடிமகன். வாக்களிப்பது என்பது என்னுடைய கடமை. பல தேர்தல்களில் வாக்குச் செலுத்தியிருக்கிறேன். அதே போன்று தான் இந்த தேர்தலிலும் வாக்களிக்கச் சென்றேன். வாக்குச்சாவடியில் எனது அடையாள அட்டையைக் காண்பித்தேன். வாக்குச்சாவடி அதிகாரிகள் பட்டியலில் பெயர் இல்லை என்றார்கள்.

ஆனாலும் வாக்களிக்க அனுமதித்தார்கள். அதன் பேரில் வாக்களித்துவிட்டுத் திரும்பினேன். இதில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் அது என்னுடைய தவறு அல்ல.மேலும் வாக்களிக்க அனுமதித்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று தான் தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார். என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றோ, விசாரணைக்கு அழைக்கப்படுவேன் என்றோ அவர் சொல்லவே இல்லை’ என்று கூறினார்.