ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை – ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி

 

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை – ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி

ஆந்திராவில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்ற பின் பல அதிரடி திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆந்திர சட்டமன்றத்தில் அம்மாநில இளைஞர்களுக்கான சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. மேலும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,  அரசு கட்டுப்பாட்டில் பார்கள், கூட்டுத் தொழில் நிறுவனங்கள், அரசு துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள், பாலியல் வன்கொடுமைக்கு 3 வாரத்தில் தூக்கு என பல அதிரடி திட்டங்களை அமல்படுத்தி மக்களின் அமோக வரவேற்பை பெற்றுவருகிறார்.

ஜெகன் மோகன் ரெட்டி

இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைகூட்டம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடந்தது. அதில் மார்ச் 5 க்குள் தேர்தல நடத்த திட்டமிடப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் தேர்தலில் அரசியல் கட்சிகள், ஓட்டுக்கு பணம் கொடுத்தால் சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். வேட்பாளர் பணம் வழங்கியது, அவரது வெற்றிக்கு பிறகு தெரிந்தால் சம்பந்தப்பட்டவரின் பதவி பறிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.