ஓட்டுக்காக மூத்த அரசியல்வாதி இப்படி தவறா பேசலாமா? சரத் பவாரை தாக்கிய மோடி

 

ஓட்டுக்காக மூத்த அரசியல்வாதி இப்படி தவறா பேசலாமா? சரத் பவாரை தாக்கிய மோடி

ஓட்டுக்காக மூத்த அரசியல்வாதி தவறான கருத்துக்களை கூறும்போது நான் மோசமாக உணருகிறேன் என தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசினார்.

மகாராஷ்ராவில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. நாசிக்கில் பா.ஜ.வின் தேர்தல் பிரச்சார கூடம் நடைபெற்றது. அதில் பிரதமர்  நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த காலங்களில் அரசியல் நிலையற்றதன்மையால் மகாராஷ்டிரா பாதிக்கபட்டு இருந்தது. முதல்வர் தேவந்திர பட்னாவிஸ் கடந்த 5 ஆண்டுகளாக நிலையான அரசை வழங்கினார்.

தேவந்திர பட்னாவிஸ்

ஜம்மு அண்டு காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கியது 130 கோடி இந்தியர்களின் விருப்பம். மத்திய அரசின் இந்த முடிவால் வன்முறை, தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாத சுழற்சியிலிருந்து காஷ்மீர் காப்பாற்றப்பட்டுள்ளது. டெல்லியின் (காங்கிரஸ் ஆட்சியால்) தவறான கொள்கையால் 40 ஆண்டுகளாக அவர்கள் பாதிக்கப்பட்டனர் மேலும் 42 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தேசிய நலன் கருத்தி மத்திய அரசு எடுத்த  முடிவை ஆதரிப்பதற்கு பதிலாக அரசியல் லாபத்துக்காக எதிர்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன.

காஷ்மீர் தொடர்பான முடிவில் நாடு ஒற்றுமையாக இருக்கும் வேளையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒத்துழைக்க மறுக்கின்றன. காங்கிரஸ் தலைவர்கள் கூறும் கருத்துக்களை நமக்கு எதிரான மற்ற நாடுகள் மற்றும் தீவிரவாத அமைப்புகள் பயன்படுத்தி கொள்கின்றன. 

சரத் பவார்

என்னால் காங்கிரஸ் கட்சியின் குழப்பத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சரத் பவார்? அவரை போன்ற பழுத்த அரசியல்வாதி ஓட்டுக்காக இது போன்ற தவறான அறிக்கைகளை வெளியிடும்போது நாம் மிகவும் மோசமாக உணருகிறேன். அவர் பக்கத்து நாட்டுக்காரர் போல் பேசுகிறார். ஆனால் அனைவரும் தெரியும் தீவிரவாதத்தை உற்பத்தி செய்யும் ஆலை எங்குள்ளது என்று. இவ்வாறு அவர் கூறினார்.